Sunday 11 November 2018


தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம்   10 11 2018  மாதாந்திர கூட்டத்தை சிறப்பாக நடத்தியது. காலை பத்து முப்பதுக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணிக்கு நிறைவு பெற்றது .இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் அண்மையில் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வி என்று அழைக்கப்படுகின்றன தோழர் ஆர். வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார. 175 திற்கு மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தஞ்சை  மேரிஸ் கார்னர்  தொலைபேசி வளாகத்தில் கூட்டம்  நடைபெற்றது. முதல் நிகழ்வாக சங்கத்தின் கொடியினை மாநில செயலர் ஆர் வி அவர்கள் ஏற்றிவைக்க அனைத்து தோழர்களும் சங்கத்தின் கோஷங்களை வீர முழக்கம் இட்டனர். பிறகு கூட்ட அரங்கில் கூட்டம் துவங்கியது.
தோழர் கே. சந்தானகோபாலன் துணைத்தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். .தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர் தனது உரையில் தோழர் RVஅவர்கள் நமது தஞ்சை சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் லைவ் சர்டிபிகேட் மற்றும் தொலைபேசி சர்டிபிகேட் அனைவரும் தவறாமல் அளித்திட வேண்டும் என்றும் வருகின்ற 10 12 18 திங்கள் கிழமை தஞ்சை கல்லு குளம் பகுதியில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் மாவட்ட சங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்தார் தவிரவும் வருகிற 22 11 2018 வியாழக்கிழமை தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தவறாமல் அன்று காலை 10 மணி முதல் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்கக் கோரி வேண்டுகோள் விடுத்து உரையை நிறைவு செய்தார் தோழர் கே சந்தானகோபாலன் மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து தோழர்களும் இந்த சந்தர்ப்பத்திலே விடுபட்ட இந்த வருட சந்தாவையும் நன்கொடையையும் தவறாமல் வழங்க கோரியும் மாவட்ட whatsapp குரூப்பில் புதிதாக இணைய விரும்பும் தோழர்களையும் வேண்டி வேண்டுகோள் விடுத்தார் .
மாநில செயலர் தோழர் ஆர் வி அவர்கள் அனைத்து தோழர்களின் ஆரவாரத்துடன் தனது உரையை தொடங்கினார். தஞ்சை மாவட்டம் என்றாலே தொழிற்சங்கத்தில் சற்று வித்தியாசமாக பெருமை தரும் விதத்திலே சிறப்பாக செயல்பாடு பிழம்பாக செய்வது பற்றியும் இங்கு நடைபெறும் சமூக தொண்டு செயல்பாட்டினையும் பாராட்டியதோடு அல்லாமல் இங்கு நடைபெறுவது போல் தான் செல்லும் எல்லா கிளைகளிலும் தஞ்சை மாதிரி செயலாற்ற கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் தற்போது BSNL நிதி நிலவரம் பின்தங்கிய நிலையில் இருப்பதால் மின் கட்டணத்தை கூட செலுத்த இயலாமையும் ஊழியர்களுக்கு காலம் தாழ்ந்து ஊதியம் பட்டுவாடா செய்வது பற்றியும் தவிரவும் அண்மையில் நடந்த வெள்ள பாதிப்பினால் கேரளா மாநில பிஎஸ்என்எல் வருமானம் கடந்த நான்கு மாதங்களாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும் எம்ஆர் எஸ் பட்டுவாடா கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது பற்றி கூறினார் இதற்கு மாற்று வழி என்ன ஏது என்று யோசித்து வேறுவகையில் நமது கோரிக்கைகளை வெற்றி பெற மாநில மத்திய சங்கங்கள் போராடும் என்றும் தற்போது நாம் பெற்று வரும் ஓய்வு ஊதியம் தற்போதைய முறையையும் இந்த மாதத்தில் இருந்து பெறக்கூடிய புதிய முறையையும் ஒப்பிட்டுப் பேசி அதனுடைய சாதக பாதகங்களை விளக்கி பேசினார் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி பெறவேண்டிய மாற்றம் பற்றியும் அதை பெறுவதற்கு நாம் ஆற்ற வேண்டிய செயல்பாட்டினையும் மிக சிறப்பாக விளக்கி பேசினார் எப்படிப்பட்ட கோரிக்கைகள் ஆனாலும் நாம் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெறுவோம் என கூறி தனது உரையை நிறைவு செய்தார். முன்னதாக மாநில செயலர் அவர்களுக்கு சிறந்ததொரு வரவேற்பு நல்கி சந்தன மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்
இந்த மாதம் பணி ஓய்வு பெற்ற இரண்டு தோழர்களுக்கு மணி விழாவும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய தோழர் தோழிகளுக்கும் கேக் வெட்டி வாழ்த்து கோஷங்கள் முழங்கிட சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்றி நவிலல் இற்கு பிறகு மதிய இன்சுவை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
 இப்படிக்கு,
தலைவர் , செயலர் மற்றும் உறுப்பினர்கள் 
பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கம்,
 தஞ்சை மாவட்டம்.





No comments:

Post a Comment