Saturday, 3 November 2018


AIBSNL ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை BSNL  உதவும் உள்ளங்கள் மற்றும் கோட்டை ரோட்டரி சங்கம் பட்டுக்கோட்டை, இணைந்து   02 11 2018 வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா கடுவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் இல்லம் சென்று அங்கு உள்ள உறுப்பினர்களுடன்  தீபாவளி பண்டிகை நிகழ்ச்சி கொண்டாடினார்கள்.  இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 325 வயதானவர்கள் 75 பாதிக்கப்பட்ட பெண்கள் 30 பணியாளர்கள் 40 ஆக மொத்தம் 470 பேர் தங்கியுள்ளனர்.
இந்த இல்லத்தை திரு விஸ்வநாதன் அவர்கள் நல்ல முறையில் நடத்தி வருகிறார்கள். நமது சங்கம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக இங்கு உள்ளோருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறோம் .இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் திரு சி வினோத் ITS  தஞ்சை BSNL முதன்மை பொது மேலாளர் மற்றும் மூன்று BSNL  துணை பொது  மேலாளர்கள் மற்றும் கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் தோழர் C.V.தங்கையன் நமது மாவட்ட செயலர் V. சாமிநாதன் மாவட்ட துணை தலைவர் K. சந்தானகோபாலன் மாவட்ட பொருளாளர் K. சீனு  K. அய்யனார் இணைச்செயலர் தோழர் KSK  தோழர் சிவசிதம்பரம் பட்டுக்கோட்டை தோழர் L விஜயகுமார் மற்றும் நமது சங்கத்தின் முன்னோடி தோழர்கள்  தோழியர்கள் பத்மினி ,மல்லிகா சுகுமாரன் ,சாரதா சந்தானகோபாலன் ,மற்றும் சங்கத்தின் முன்னோடி தோழியர்கள் கலந்துகொண்டு  விழாவினை சிறப்பித்தனர். விழா  மாலை 5 மணிக்கு தொடங்கி ஏழு மணிக்கு நிறைவு பெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக தமிழ் மொழி வாழ்த்து பாடல் அனைவராலும் பாடப்பெற்றது. பிறகு திரு. விஸ்வநாதன் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளர், வரவேற்புரை நிகழ்த்தினார். தனது உரையில் கடந்த 18 ஆண்டுகளாக நமது சங்கம் நடத்தி வரும் தீபாவளி விழாவினை நினைவுகூர்ந்து நமது செயல்பாடுகளை சிலாகித்து கூறியதோடல்லாமல் மாதந்தோறும் ஆறு ஏழு நாட்களுக்கு நமது மாவட்ட செயலர் மூலம் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிகளையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து உரையாற்றி அனைவருக்கும் நன்றி  கூறி உரையாற்றினார். பிறகு நமது  முதன்மை பொது மேலாளர், மற்றும் 3 துணை பொது மேலாளர்கள்  மற்றும் திரு சி வி தங்கையன், மற்றும் நமது சங்கத்தின் சார்பாக வந்து கலந்து கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட  தோழர்களும் அங்குள்ள பெண்களுக்கு 150 புடவைகள் ஜாக்கெட்டும் , ஆண்களுக்கு 70 வேஷ்டி சட்டைகளும், அங்கு தங்கியுள்ள 180 மாணவ மாணவியருக்கு ஆடைகளும், விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கும் இனிப்பு காரம் வழங்கி விழா இனிதே கொண்டாடப்பட்டது .10க்கும் மேற்பட்ட பெரிய பட்டாசு பெட்டிகள் பரிசாக வழங்கப்பட்டது. . கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ஆனந்த உணர்வும் மகிழ்ச்சியும் குடிகொண்டது. இந்த நிகழ்வுக்கு காரணமான அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினையும் தீபாவளி வாழ்த்தினையும் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்து எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.
நன்றி. வணக்கம்.
இப்படிக்கு,
கே. சந்தானகோபாலன்,
துணைத்தலைவர் AIBSNLPWA
தஞ்சை மாவட்டம்.

No comments:

Post a Comment