Thursday 22 November 2018

சமீபத்தில் பூரியில் நடைபெற்ற  அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று (22-11-2018) சென்னை-8, எத்திராஜ் சாலையில் இருக்கும் CCA அலுவலக வளாகத்தில், தமிழ்மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநில அனைத்திந்திய ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பில்  நடத்தப்படும்  ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் காலை 10-30 மணிக்கு துவங்கியது. பலத்த காற்று, கன மழை என்று சென்னையை பயமுறுத்திய மழை, ஆட்டோக்கள் கிடைக்காத நிலை, நடக்குமா நடக்காதா என்ற ஐயம் உறுப்பினர் மனங்களில் வாட்டிய நிலையில் எப்படியும் இதை நடத்தியே தீருவோம். இது அகில இந்திய அறைகூவல் எது வரினும் அஞ்சோம் என்ற உறுதிப்பாட்டில் கிஞ்சித்தும் அசராமல் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட்டது. விண்ணதிரும் கோஷங்கள் பின் தலைவர் உரையாற்றும் போதே பெரு மழை மிரட்டியது. போடப்பட்டிருந்த ஷாமியானா ஒழுக துவங்கியது.
மாற்று இடம் தேடி மழையில் நனைந்தபடியே கார் ஷெட்டில் தஞ்சமடை நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழ் மாநில தலைவர் தோழர் ராமராவ் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைவர் தோழர் முனுசாமி அவர்களின் சீரிய தலைமையில் , சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் வரவேற்புரையாற்ற , அகில இந்திய துணை பொதுசசெயலர் தோழர் முத்தியாலு உண்ணா நோன்பு போராட்டத்தை துவக்கி வைத்து பேருரையாற்றினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் நடராஜன் , அகில இந்திய உதவி பொதுசசெயலர் தோழியர் ரத்னா , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாசலம், சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ், தோழர் ஸ்ரீதரன் உதவி பொது செயலாளர் , அனைத்திந்திய ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு அவர்கள் , STR கோட்ட செயலரும் தமிழ் மாநில உதவி செயலாளருமான தோழர் சுந்தரகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநில பொறுப்பாளர்கள் தோழர் ரங்கநாதன், டோமினிக் , ஜீவானந்தன் ,தோழியர் குணசுந்தரி ரங்கநாதன் ,ஆகியோர் பேசினார்கள்.
தோழர் டி ,பாலசுப்ரமணியன், பொது செயலர், அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, அவர்கள் ஒரு சிறப்பு சொற்பொழிவாற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பழச்சாறு வழங்கினார். தமிழ்மாநில துணைத்தலைவர் தோழர் விக்டர்ராஜூ அவர்கள் நன்றி நவில , உண்ணா நோன்பு போராட்டம் முடிவடைந்தது.
உண்ணாவிரதத்தில்  400 உறுப்பினர்களுக்கும் கூடுதலாக  கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.






No comments:

Post a Comment