Monday, 3 September 2018


காரைக்குடி-SSA சிவகங்கை கிளை மாநாடு மற்றும்
மாவட்டச் செயற்குழு கூட்டம்  
01-09-2018 காலை 10-30 மணிக்கு  கிளைத்தலைவர் திரு.M.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கிளை மாநாடு துவங்கியது
  
கிளைச்செயலர் தோழர்.சந்திரன் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார்  மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

NFTE மாநில அமைப்புச்செயலரும்  மாவட்டச் செயலரும் சிவகங்கை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தலைவரும் ஓய்வூதியர் கணக்கதிகாரியுமான வெ.மாரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்

NFTCL மாவட்டச் செயலர்  தோழர்  B.முருகன் வாழ்த்துரை வழங்கினார்

அகில இந்திய துணைப் பொதுச்செயலர்
தோழர்.நெல்லை அருணா அவர்கள்
சிறப்புரை நிகழ்த்தினார்.

சிவகங்கையில் நீண்டகாலம் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றியவரும் காரைக்குடியில்
DGM-ஆக பணியாற்றி விருப்ப ஓய்வில்
சென்றவரும் நமது உறுப்பினருமான
திரு.குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .

சிவகங்கை கிளை மாநாட்டில் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட
புதிய நிர்வாகிகள்

தலைவர்    M.இராமச்சந்திரன்
                               ( Rtrd SDE)-SVA
செயலர்      A.சந்திரன்
                               (Rtrd STS)-SVA
பொருளர்      நடராஜன்
                              ( Rtrd TM)
துணைத்தலைவர் B.ஜெயராமன்
துணைச்செயலர்   மாரிசெல்வம்
துணைப்பொருளர்  முனியசாமி
அமைப்புச்செயலர்   விநாயகம்

செயற்குழு உறுப்பினர்கள்
V.சண்முகம்               A.மத்தியாஸ்
S.மனோகரன்           R.இராஜசேகரன்
T.S.இன்னாசிமுத்து   சர்தார்
ரெத்தினம்                   குப்பமுத்து
பன்னீர்செல்வம்      இராமமூர்த்தி
ஆரோக்கியமேரி (Family Pensioner)
M.முத்துராமலிங்கம்  ஜெயகரன்

புதிய நிர்வாகிகளுக்கு
மாவட்ட சங்கத்தின்
வாழ்த்துக்கள்...
மாவட்ட செயற்குழு முடிவுகள்

நான்காவது மாவட்ட மாநாட்டை பரமக்குடியில்
நவம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலச்செயலர் ஆர்வி அவர்களையும் அகில இந்திய துணைப் பொதுச்செயலர் அருணா அவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிளைமாநாட்டு தீர்மானங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை
கிளை மாநாடு நடத்தப்படவேண்டும்.

அலுவலகத்தில் ஓய்வூதியர் சங்கப்பலகை வைப்பதற்கு
நிர்வாகத்திடம் மாவட்ட சங்கம் அனுமதி பெற்றத் தரவேண்டும்.

மாவட்ட மற்றும் மேல்மட்ட அமைப்புகளில்
நிர்வாகிகளை மாற்றும்பொழுது
அனைத்து கிளைச்செயலர்களையும்
கலந்து முடிவெடுக்க வேண்டும்
கிளை வாரியாக மொத்த உறுப்பினர்கள் 
காரைக்குடி            134
இராமநாதபுரம்     130
பரமக்குடி                  64
சிவகங்கை               40
                                 ----------
                                      368


No comments:

Post a Comment