அலைகடலில் படகில் ஏறி ஆழ்கடல் பகுதிக்குச் சென்று இன்னுயிரை மதிக்காமல் தன் மூச்சை அடக்கி ஆழ்கடலில் குதித்து அடிவரை சென்று பிறகு நல் முத்துக்களுடன் படகில் ஏறும் திறன் படைத்த முத்து நகராம் தூத்துக்குடியினில் நம் சங்க சங்க நாயகர்கள் நம் சங்கத்திற்காக வணிக சந்தடி மிகு பகுதியில் அறை ஒன்றை படைத்து ஆற்றல்மிகு செயல்கள் புரிந்து வருகிறார்கள். அவர்தம் செயல்களை எண்ணி மகிழ்கிறோம் சொந்த இடம் அமைந்திட வாழ்த்துகிறோம்.
AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் முதல் மாதாந்திரக் கூட்டம், 08-09-2018 அன்று காலை 10:30 மணிக்கு சங்க இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா, மா. துணைத் தலைவர் பரமசிவம், மா. இணைச் செயலர் எம்.பர்னபாஸ் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர்.
இந்த முறை, பொது இடத்தில்(ராஜாஜி பூங்கா) அல்லாது, நமது சங்க சொந்த அலுவலகத்திலேயே கூட்டம் நடைபெற்றது குறித்த மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்தி கொண்டாடினர்.
கூட்டத்தில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment