Saturday 8 September 2018


புதுச்சேரி  மாதாந்திர 
பொதுக்குழு  கூட்டம்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 08-09-2018 அன்று கூட்டம் நடந்தது. தலைவர் திரு.K.R.சிவகுமார்  தலைமை தாங்கினார்.  92 பேர் கலந்துகொண்டனர்.
    கூட்டத்தில் கடந்த மாதம் 31-08-2018-ல் ஓய்வுபெற்ற NFTE தமிழ்மாநிலத் தலைவரும், சம்மேளன செயலருமான திரு.P.காமராஜ் அவர்கள் நமது சங்கத்தில் ஆயுள் சந்தா உறுப்பினராக பதிவு செய்துகொண்டார். அவருக்கு வீரவாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்.  அவரின் பணி ஓய்வு விழாவில் நமது  உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மேலும் திருமதி. D.ருக்மணி,SDE, சென்ற மாதம் மாற்றுச் சங்கத்தில் சேர்ந்த திருமதி.P.K.ரேணுகாதேவி, குடும்ப ஓய்வுதியர்கள் திருமதி,D. பிரேமா, திருமதி.M. கீதா   ஆகியோரையும் சேர்த்து 5 பேர் ஆயுள்சந்தா செலுத்தி உறுப்பினர்கள் ஆனார்கள். இத்துடன் உறுப்பினர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.
G.M அவர்கள் நமது சங்கத்தை அழைத்துப் பேசாமலும், பென்சனர் குறைதீர்வு கமிட்டி கூட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் நடத்தாமலும், சங்கத்திற்கென அலுவலக அறை தராமல் காலந்தாழ்த்தும் போக்கினைக் கண்டித்தும், மாநில முதன்மைப் பொதுமேலாளர் மற்றும் மாநிலச் செயலரின் கவனத்துக்கும் கடிதம் மூலம் கொண்டுவந்து தீராதபட்சத்தில் ஆர்ப்பாட்டம்/தர்ணா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.  
கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக இதுவரை ரூ.14,300/- தரப்பட்டுள்ளது. மெடிக்கல் பில் மற்றும் மெடிக்கல் அலவன்சு பட்டுவாடா கிடைக்காததைப்பற்றி பல உறுப்பினர்கள் குறை கூரினர். இம்மாதம் நிதி ஒதிக்கீடு கிடைத்ததும் பட்டுவாடா நடக்கும் என செயலர் கூரிணார்.
KYP படிவம் 190 உறுப்பினர்களிடம் பெற்றுள்ளதாகவும் அதை மாநிலச் செயலர் மூலம் PCCA   அலுவலகத்திற்கு தரப்படும் என்று செயலர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment