AIBSNLPWA
பட்டுக்கோட்டை ( தஞ்சாவூர் மாவட்டம் ) கிளைக் கூட்டம்
===========================
14-09-18 அன்று
நமது கிளையின் முதல்
கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்
CV. தங்கையன் அவர்கள் தலைமையேற்றார்.
அவர்
தமது தலைமையுரையில்: முன்பு
போலெல்லாம் இப்பொழுது
போராடி
வெற்றி பெற முடிவதில்லை.ஊடகங்கள்
போராளிகளுக்குச்
சாதகமாயில்லை. இந்தச் சூழ்நிலையிலும்
நாம் 78.2 சத டி.ஏ இணைப்பு
நிலுவைத் தொகைக்காகப்
போராடி நிலுவையைப்பெற்றோம்
என்றால்
நாம்
நல்ல தலைமையைக் கொண்ட அமைப்பை வைத்திருப்பதால்தான். அவர்கள்
பின்னால் நாம் பெரும் படையாக
அணி திரள்வோம். அது
ஒன்றே நமக்கு முன்னேற்றத்தைத் தரும்.
அதற்கு நாம் முறையாகச் சந்தா
செலுத்துதல் அவசியம். சந்தா
இல்லாமல் எந்த இயக்கமும் இயங்க முடியாது. தலைவர்கள் சம்பளம் ஏதுமின்றி தங்களது உடலுழைப்பைத் தந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு
பொருள் இழப்பையும் நாம்
தந்துவிடலாகாது என்று நல்லதொரு
தலைமையுரையைத் தந்தார்.
தோழர்.
நல்லதம்பி அவர்கள் வரவேற்புரை
ஆற்றினார். அடுத்து
சின்னக்கண்ணு அவர்கள் ஜெகனுடன் இணைந்து செயல் பட்டதையும்
3 மாதம் போராடியதற்காக ஜெயிலிலிருந்த அனுபவத்தையும்
பகிர்ந்து
கொண்டார்.
தலைவர்
வீரபாண்டியன் அவர்கள் வெளியூர் செல்வதன் காரணமாக
சிறிது
நேரமே பேசி வாழ்த்திச் சென்றார். தோழர்கள்
சி. சுந்தரராஜன்,
ரவிச்சந்திரன்,
பன்னீர்செல்வம், G. கணேசன்
மற்றும் நமது
அமைப்புச்
செயலர் திரு. சேவியர் அவர்களும் உரையாற்றினர்.
இறுதியாக
தஞ்சை மாவட்டச் செயலர் திரு
V.சாமிநாதன் அவர்கள் சிறப்புரை
ஆற்றினார். 2006 ல்
துவங்கிய 6 வது சம்பளக் கமிஷன்
தொட்டு இன்றைய நமது சம்பள
மாற்றம் 7 வது சம்பளக் கமிஷன்
அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தை விளக்கிப்
பேசினார். 246 பொதுத் துறையில் அரசுப் பென்ஷன் கிடையாது. ஆனால்
நாம் பெற்றிருக்கிறோம் என்பதையும் கூறி
40 நிமிடங்கள் நீண்டதொரு சிறப்புரையினைத் தந்தார்.
கன்வீனர்
சிவசிதம்பரம் நன்றி கூற கூட்டம்
இனிதே நிறைவுற்றது.
4 பெண்கள்
உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றனர்.
அன்றைய
கூட்டச் செலவு ( ரூ. 500 ) ஐ
மாவட்டச் சங்கம் ஏற்றுக் கொண்டது.
No comments:
Post a Comment