காரைக்குடி மாவட்ட மாநாடு ஆலோசனைக் கூட்டம்
பரமக்குடியில் கிளைத்தலைவர் திரு.S.சங்கிலிராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர்
திரு.A.காசிநாதன்
அவர்கள் வரவேற்று
பேசினார். மாவட்டச்செயலர் தோழர்.P.முருகன்
அவர்கள் நான்காவது மாவட்ட மாநாடு நடத்துவது பற்றிய
முன்வரைவை விளக்கிப்பேசினார்
சிவகங்கை கிளைச்செயலர் திரு.A.சந்திரன்
அவர்கள் நிதி ஆதாரத்தை
திரட்டுவது பற்றிய
பல்வேறு ஆலோசனைகளை நல்கினார்.
சிவகங்கை திரு.T.S.இன்னாசிமுத்து அவர்கள்
மாநாடு சிறக்க
தன் அனுபவங்களை
ஆலோசனைகளாக வழங்கினார்
எதிர்வரும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி
வியாழக்கிழமை நமது
சங்கத்தின் 4-ஆவது மாவட்ட மாநாடு
நடைபெறும். மாவட்ட
மாநாட்டுடன் கிளையின் முதலாவது கிளைமாநாடும் நடைபெறும்
மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவராக
திரு.S.சங்கிலிராஜன் அவர்களும்
வரவேற்புக்குழுச் செயலராக
தோழர்.A.கணேசன் அவர்களும்
வரவேற்புக்குழு பொருளராக
தோழர்.P.இராமசாமி அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரங்கக்குழு உணவுக்குழு என
இரண்டு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
மாநாடு நடத்துவதற்கு கிளை உறுப்பினர்களிடம்
குறைந்தபட்சம் தலா ₹ 1000/- வசூலிப்பது என
முடிவு செய்யப்பட்டுள்ளது. சார்பாளர் கட்டணம்
கிடையாது.
மாநாட்டில் பங்கு கொள்ளும்
அனைத்து சார்பாளர்களுக்கும்
பேனா விநியோகம்
செய்ய ஒத்துக்கொண்டுள்ளார் தோழர்.சுகுமாறன்.
மாவட்ட மாநாடு மற்றும்
கிளை மாநாட்டில்
கலந்து கொள்ளும்
பரமக்குடி கிளை உறுப்பினர்
அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவிக்கப்படும்.
இதன் முழுச்செலவையும் வரவேற்புக்குழு செயலராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். கணேசன் ஏற்றுக்கொள்கிறார்.
மாவட்ட மாநாட்டில் மாநிலச்செயலர்
ஆர்வி அவர்களும்
அகில இந்திய துணைப்பொதுச்செயலர்
அருணா அவர்களும்
சிறப்புரை ஆற்றுவர்.
No comments:
Post a Comment