Friday, 10 September 2021
Saturday, 4 September 2021
Friday, 3 September 2021
மாவட்ட செயலாளர்களின் முக்கிய கவனத்திற்கு
மத்தியசங்கம் பென்ஷன்
Anamoly வழக்கை டெல்லி Principal CAT ல் விடாது முயற்சித்ததின் விளைவாக BSNL துவக்கியதற்கு, பிறகு முதல் 9 மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் ஐ revise செய்ய வேண்டும் என்று 16.12.2016 ல் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து இலாக்கா டெல்லி உ யர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் அதை உ யர் நீதி மன்றம் தள்ளு படி செய்தது.எனவே நாம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர்தோம். நவம்பர் 2020ல், 16.12.2016 ல் அளித்த தீர்ப்பை அமுல் படுத்துமாறு அறிவுறுத்தியது. பென்ஷன் இலாகாவும் CAT தீர்ப்பை DOT அமுல் படுத்தி நீதி மன்ற அவமதிப்பை தவிர்க்க அறிவுறுத்தியது. இதற்கு பிறகும் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் ஒரு நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்ததின் விளைவாக வேறு வழி இன்றி உத்திரவு இட இலாக்கா முன் வந்து உள்ளது. நமது மத்திய சங்கமும் 26.08.2021 அன்று இலாக்கா செயலாளருக்கு (DOT) கடிதம் எழுதியுள்ளது. இம் மாததிற்குள் உத்திரவு வெளிவரும் என்று தெரிகிறது.
மாவட்ட வாரியாக இதில் பயன் பெறுவோர் அடங்கிய விவரங்கள் இத்துடன் கொடுக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் சம்பந்தபட்ட ஓய்வுதியர்களை அல்லது அவர்களது குடும்ப ஓய்வூதியர்களை சந்தித்து இது குறித்து விளக்க வேண்டும்.
மாநில செயலாளர்
மதுரை 59, சேலம் 33, கோவை 27, வேலூர் 27,
ஈரோடு 23, திருச்சி 16, நெல்லை 15, குடந்தை 14, கடலூர் 14, தஞ்சாவூர் 11, காரைக்குடி 10, தூத்துக்குடி 8, குன்னூர் 5, நாகர்கோவில், விருதுநகர், தர்மபுரி 3(அ )4, புதுச்சேரி 2.
Sunday, 29 August 2021
தோழர்களே!
26-08-2021 அன்று நடைபெற்ற நமது பொதுக்குழுவில்
34 தோழர்கள் கலந்து கொண்டனர். பொதுகுழுவை கிளைத் தலைவர் தோழர். SVC குரு தலைமை ஏற்று நடத்த, கிளைச் செயலாளர் தோழர் RG ரங்கன் அனைவரையும் வரவேற்றார். இடைப்பட்ட காலங்களில் மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியப்பின், தலைவர் தமது
உரையில் நமது கிளையின் செயல்பாடுகளை தெளிவுப் படுத்தினார். சிறப்புரையாக நமது மாவட்ட செயலாளர் தோழர் C துரைசாமி பேசுகையில், இன்றைய நிகழ்வுகலான Medical allowance, CGHS, MRS card, இன்னும் மற்ற பிரச்சனைகள் சம்மந்தமாக சிறப்புரையாற்றினார். ஆய்படு பொருள் மீது விவாதம் நடந்தது, நிதி அறிக்கையை கிளைப் பொருளர் தோழர் காளிமுத்துசாமி சமர்ப்பிக்க, பொதுக்குழு ஏற்று கொண்டது. உதகை AIBSNLPWA கிளை தோழரும் NFTE BSNL தலைவருமான தோழர் K பாலசுப்பிரமணி மற்றும் BSNLEU மாவட்ட செயலர் தோழர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர், தோழர் KV கணேஷ் அவர்கள் கிளையின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசியதோடு, ஓய்வூதியர் நலன் கருதி Finger Print Machine வாங்குவதற்கு ரூபாய் 2000/. நன்கொடை வழங்கினார் நாம் நன்றியோடு பெற்றுக் கொண்டோம். இறுதியில் தோழர் RG ரங்கன் பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.இந்த பொதுக்குழு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது AIBSNLPWA குன்னூர் கிளையின் மனமார்ந்த நன்றிகள்!
Friday, 27 August 2021
14.08.2021 அன்று
நடை பெற்ற மாநில செயலக கூட்ட முடிவின் படி, இன்று (27.08.2021) CGHS
Additional Director திரு
சண்முகநாதன் அவர்களை மாநில தலைவர் தோழர் V.ராமராவ், மாநில செயலாளர் R. வெங்கடாசலம் , மாநில துணை செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் மூவரும் சந்தித்து, நமது ஓய்வூதியர் கள் சென்னையில் உள்ள MIOT, BILLROTH மற்றும்
பிற மருத்துவ மனைகளில் உள் நோயாளியாக சேர்ந்து Treatment பார்த்து கொள்ள இயலாத சூழ்நிலை குறித்து விளக்கமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம். MIOT-ஐ பொறுத்த வரை
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய Bill கள் அனைத்திற்கும் காசோலை அனுப்பி விட்ட தாகவும், அவர்களுக்கு payment சென்று விட்டதற்கான தகவலை எதிர் பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்
Billroth மருத்துவ மனையில் Beds availability இல்லாத காரணத்தினால் தான் admission இல்லை என்றும் தெரிவித்தார். பெங்களூருவில் அப்போல்லோ நமது ஓய்வூதியர்களுக்கு Empanel லில் உள்ளது
போல் சென்னை யிலும் இருந்தால் கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டதற்கு, சென்னை அப்பல்லோ , அவர்களாக
வரவில்லை . நாங்களாக ( CGHS நிர்வாகம்
) அப்பல்லோவை அணுகுகிறோம் என்று தெரிவித்தார். இன்றைக்கு
CGHS கொடுக்கும்
rates 2014 ம் ஆண்டு நிர்ணயிக்க பட்டது என்றும் அதை மாற்றினால் தான் பல மருத்துவ மனைகள்
தானாக வருவார்கள். இதை உங்கள் போன்ற ஓய்வூதியர்கள் அமைப்பு தான் டெல்லி மட்டத்தில் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நெல்லை
போன்று திருச்சி யிலும் ஒரு மருத்துவ மனை empanel செய்ய
வேண்டும் என்று கோரிய தற்கு, SRM Institute முன் வந்து இருப்பதாக வும் விரைவில் இறுதி செய்ய படும் என்றார்.
Addl Director அவர்கள்
மிகவும் பரிவுடனும், அக்கறையுடனும் அவருக்கு இருக்கும் பணிகளுக்கு இடையில்
நம்முடைய கடிதத்தை பார்த்து வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். நமது மாநில சங்கம் வெளியிட்ட CGHS Guide அவருக்கு கொடுத்தோம். அதை பெற்று கொண்டு நம்முடைய முயற்சியை பாராட்டினார்.
இந்த
சந்திப்பு தற்போது உள்ள தேக்க நிலையை போக்கி முன்பு போல் தடை இல்லாமல் MIOT, மற்ற மருத்துவ மனைகளில் treatment எடுத்து கொள்ள வழி வகுத்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.
Subscribe to:
Posts (Atom)










