தஞ்சாவூர் மாவட்ட கூட்டம்
அகில
இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.
தஞ்சை மாவட்டம். இன்று 03.01. 2020 வெள்ளிக்கிழமை
தஞ்சை மத்திய தந்தி அலுவலக வளாகத்தில் செயற்குழு கூட்டம் காலை சரியாக பத்து முப்பது மணி அளவில் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமையில் தோழர் ஏகே தனபாலன் கௌரவ தலைவர் மற்றும் தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று கூட்ட நிகழ்வுகளை சிறப்புற நடத்தினார். கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட அஜந்தா பற்றி தோழர்கள் மதுரை ராஜேந்திரன், ஏகே தனபாலன் , பிரின்ஸ், பிரான்சிஸ் சேவியர், அய்யனார்
, கைலாசம், நடராஜன், புருஷோத்தமன், சந்தானகோபாலன்,எம். இருதயராஜ் , கைலாசம், எத்திராஜ்,
பொன்னையா, தோழியர்கள் மல்லிகா சுகுமாரன் , பத்மினி, பட்டுக்கோட்டை தோழர்கள் என். வீரபாண்டியன் ,சி. நாடி முத்து, சிவசிதம்பரம், சி.வி. தங்கய்யன்,
மண்ணை தோழர் கலியபெருமாள், பாபநாசம் தோழர் அர்ஜுனன், அய்யம்பேட்டை தோழர் ஜெயபாரதி, ஆகியோர்கள் தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்து பதிவு செய்தனர். முடிவாக எல்லோரது கருத்துக்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள்.
1.
ஜனவரி
மாத மாதாந்திர கூட்டத்தினை தஞ்சை மத்திய தந்தி வளாக அரங்கில் வருகிற இரண்டாம் சனிக்கிழமை 11 .1. 2020
ல் நடத்துவது என்றும்
2.
அடுத்த மாத கூட்டத்தினை தஞ்சை பெசன்ட் லாட்ஜ் வளாகத்தில் நடத்துவது என்றும் 3.
வருகின்ற மார்ச் மாத மாதாந்திர கூட்டத்தினுடன் உலக
மகளிர் தினத்தினையும் சேர்த்து சிறப்பாக கொண்டாடுவது என்றும் தஞ்சை கல்லு குளம் மக்கள் மன்றத்தில் நடத்துவது என்றும் சிறப்பு விருந்தினராக மத்திய சங்க தோழர் முத்தியாலு அவர்களையும் மற்றும் சென்னை தோழியர் ரத்னா அவர்களையும் அழைத்து சிறப்புற நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதிய இன்சுவை விருந்து உடன் கூட்டம் இனிதாக முடிவுற்றது.
Click the Link given with mouse and see the Video of The events