Monday, 30 September 2024

 PUDUCHERY DISTRICT ANNUAL GENERAL BODY MEETING.

புதுச்சேரி மாவட்ட மாநாடு 28.09.2024 அன்று தோழர் N. முனுசாமி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.காலஞ் சென்ற தோழர்கள், தலைவர்களை நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. திரு. N. முனுசாமி தலைவர், தலைமை உரைஆற்றினார். தோழர் A. ஹரிஹரன் மாவட்ட செயலர் வரவேற்புரை நிகழ் த்தினார். தோழர்.. R.அசோகன் DS CDL, ராஜேந்திரன் ADS TVL, ஆருன்பாஷா CDL, மற்றும், தோழமை சங்க செயலர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள் M. சாம்பசிவம், D. விக்டர்ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினர். தோழர்கள் S. சுந்தரகிருஷ்ணன் மாநில செயலர், p. ஜெயராமன் அகில இந்திய துணை செயலர் சிறப்புரை ஆற்றினர்.BSNL நிர்வாகத்தின் சார்பில் திரு சம்பத் DGM, CAO கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலர் அறிக்கை மற்றும் , மாவட்ட பொருளாளர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அவை ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  தலைவர். தோழர். அசோக்ராஜ், செயலர். K. R. சிவகுமார். பொருளாளர். A. ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் ஏகமானதாக தேர்வு செய்ய பட்டனர்.தோழர். K. S. சிவகுமார் நன்றியுரை கூற, மாநாடு இனிதே நிறைவுற்றது. சிறப்பு மதிய உணவு வழங்க பட்டது. புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.

S. சுந்தரகிருஷ்ணன் CS


 MADURAI DISTRICT ANNUAL GENERAL BODY MEETING.

25-9-2024 புதன் கிழமை மதுரை தல்லாகுளம் காந்தி மியூசியம் அருகில் உள்ளபூங்கா முருகன் கோவில் திருமண மண்டபத்தில் மறைந்த நமது தோழர் வீராச்சாமியின் நினைவினை போற்றும் விதமாகநடைபெற்ற 15 வது மாவட்ட மாநாடு தோழர் வீராச்சாமி நினவரங்கம் என பெயரிடப்பட்டு  நடைபெற்றதுமுதல் நிகழ்வாக தோழர் வீராச்சாமியின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

  தோழர் ராஜேந்திரன் அவர்களின் விண்ணதிரும்  கோரிக்கை முழக்கங்களுடன் மூத்த தோழர்                G R தர்மராஜன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின் தோழர் நாகராஜன் அவர்கள் அஞ்சலி செய்தியை படித்து   மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாவட்டச் செயலாளர் தோழர் G ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் கலந்து கொண்டார். நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக தோழர் ஜெபக்குமார் அவர்களும் மதுரை மாவட்ட NFTE சங்க செயலர் தோழர் V ரமேஷ் அவர்களும் AIBSNLPWREA மாவட்ட செயலாளர் தோழர் S ராமச்சந்திரன் அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநிலச் சங்கப் பிரதிநிதிகள் தோழர்கள் சூரியன், பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி உரை நிகழ்த்தினர். திண்டுக்கல் தேனி வத்தலகுண்டு கிளை செயலாளர்கள் மாநாட்டினை வாழ்த்தி அவர்களது கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

 மூத்த தோழர் திரு ஜி ஆர் தர்மராஜன் அவர்கள் சங்க வளர்ச்சி குறித்தும் ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

  மதுரை மாவட்ட பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சார்பில் திரு மோகன் தாஸ் DGMஅவர்களும் திருமதி கீதா AGM அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்களது உரையில் நமது ஓய்வூதிய சங்கத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய மாவட்டம் தயாராக இருப்பதாகவும் சங்கத்திற்கு நாம் கேட்டபடி   தல்லாகுளம் பகுதி வளாகத்தில் தரைத்தளத்திலேயே ஒரு அறையை கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வந்திருப்பதாகவும் மருத்துவப்படி மருத்துவ பில்கள் வழங்குதல் போன்றவற்றை விரைவாக செய்ய மேலும் ஒரு ஊழியரை நியமித்திருப்பதாகவும் கூறினர்.

 மாநிலச் செயலாளர் தனது உரையில் முதலில் மாவட்ட சங்கத்தினை வாழ்த்தி பேசினார். பின்பு KYP ,FMA போன்ற பிரச்சனைகளை பற்றிய விளக்கங்கள் கொடுத்தார். ஓய்வூதியம் வழங்கப்படுவதில் உள்ள தாமதங்கள் களையப்பட்டு இம்மாதம் முதல் மாதத்தின் கடைசி வேலை நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஓய்வூதியம் கிடைக்கச் செய்ய ஆவன செய்யப்பட்டதால் இம்மாத ஓய்வூதியம் 25 9 24 அன்று கிடைத்திருக்கிறது என்ற விளக்கத்தினை எடுத்துரைத்தார். குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் அதற்கு ஓய்வுதியர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் விளக்கிக் கூறினார். ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான பயோமெட்ரிக் கருவிகளை CCA அலுவலகம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இது நடைமுறைப் படுத்தப்படும்போது  ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் அளிப்பதில் உள்ள பெரும்பாலான சங்கடங்கள் தீர்க்கப்படும்

தமிழ் மாநில சங்கத்தின் முயற்சியின் காரணமாக ஒரு இன்கிரிமெண்ட் குறைக்கப்பட்டு 78.2% IDA இணைப்புடன்  ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயம் செய்ய ஆவன செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கு உரிய Declaration படிவத்தில் (affidavit in non judicial stamp paper ல் ) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். இதுவரையில் CCA அலுவலகத்துக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் 30 பேருக்கு இம்மாதம் இந்த இணைப்பு போடப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு விரைவில் கிடைக்க மாநில சங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் இதன்மூலம் பென்சன் மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 வரை அதிகரிக்கும். அரியர் தொகை சுமார் 1,20,000 வரை கிடைக்கும். இதுவரையில் அதற்கான விண்ணப்பித்தினை சமர்ப்பிக்காத பாதிக்கப்பட்ட தோழர்கள் விரைவில் அதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சென்னை சொசைட்டி விவகாரம் மத்திய சங்கத்தின் உதவியுடன் தீர்க்க  ஆவன செய்யப்படும் என்று கூறினார்.

ஓய்வூதிய மாற்றம் பெற  பாட்டியாலா மத்திய சங்க செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி செயல்படுத்தப்படும் என தெளிவு படுத்தினார். Notional Increment, Commutation பிடித்தல் காலம் குறைக்கப்படுதல்  பற்றிய விளக்கங்களையும் தெரிவித்தார். அவரது உரைக்குப் பின் மதிய உணவிற்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

 சிறப்பான மதிய உணவிற்கு பின் மதியம் 2:30 மணி அளவில் மீண்டும் கூட்டம் தொடங்கியது கூட்டத்தில் ஆண்டறிக்கை செயலரால் படிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. வரவு செலவு கணக்கு மாவட்ட பொருளாளரால் படிக்கப்பட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவரது பதில் பெற்று சபை ஏற்றுக் கொண்டது.

அதன் பின்னர் மாநிலச் செயலாளர் மதுரைக்கு CGHS wellness centre வருவது குறித்து விளக்கங்கள் கொடுத்தார். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் CGHS பட்டியலிட்ட மருத்துவமனைகள் தொடங்கப்பட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாகவும் விரைவில் இவை அமுல்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.

அதன்பின்பு இப்போது உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாவட்ட சங்க செயற்குழு தலைவரால் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில அமைப்பு செயலாளர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் நடத்தினார்.

புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் நன்றி உரை கூறி மாவட்ட சங்கத்தினை சிறப்பாக வழி நடத்த அனைவருடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டினார்.

தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.


Tuesday, 24 September 2024

 

Kalaignar centenary super speciality hospital, Guindy, Chennai  has been included under CGHS  empanelled hospitals list from today. CGHS  cardholders can take cashless treatment there for any disease from today 23-09-2024 onwards. Please see the order below.









Friday, 20 September 2024

 


                        The List contains 8 pages which are in Pdf format. To open and view the file, a Link is given. Please click the LINK and see.











Thursday, 19 September 2024

 

Submission of KYP FORM:-

1  This needs to be submitted by All SAMPANN Migrated  PensionersS, as per the decision of CGCA           

2. So only the MELA is conducted.

3. DIRECT SAMPANN PENSIONERS, need not give.                 

4. Now, pensioners can view only datas. CCA office intends to provide access to download eppo.

5. Before that the correctness of datas has to be verified based on KYP Form

6.  In the KYP, Pensioners have to affix individual photos of both Pensioner and Family Pensioner.

 7. This is as per the guidelines of CGCA. Whereas, what CS inferred is that if individual feels no correction is needed in SAMPANN, then KYP is not mandatory.   Early action by DS IS REQUESTED .

MESSAGE FROM CIRCLE SECRETARY

Pension Revision  based on78.2 IDA without extra increment. 

1 30 பேருக்கு pension revision மாற்றம் செய்யப்பட்டு, arrears வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து 36 பேருக்கு, pension மாற்றம் sanction க்கு அனுப்பப்பட்டுள்ளது.

3.  அடுத்த batch 26 பேர் பரிசீலிக்க படுகிறது.

4. மாவட்ட செயலர்கள், அனைவரும் affidavit format ல்  கொடுக்க ஏற்பாடு செய்யவும்.


 

Pakhwada Means Fortnight









Wednesday, 18 September 2024

 

பாட்டியாலா செயற்குழு கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை : 

தற்போதைய தமிழ்நாடு மாநில சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 17,173.

1) பென்ஷன் குறித்து.. 

01/01/2017க்குப் பிறகு  பணி ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது அகில இந்திய சங்கத்தின் தலையாய கோரிக்கை. கடைசியாக நடந்த அகமதாபாத் செயற்குழு நடக்கும்போதுதான் டெல்லி முதன்மை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்திருந்த காரணத்தால், நமது கோரிக்கையை  வென்றெடுப்போம் என்ற  நம்பிக்கை இருந்தது. நமது சங்கத் தலைவர்களும் நமது துறை அமைச்சர் மற்றும் தொலைத் தொடர்பு துறை  செயலர் ஆகியோரை சந்தித்து மேல் முறையீடு  செய்யாமல் தீர்ப்பை அமலாக்குமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொலைத்தொடர்புத் துறை மேல்முறையீடு செய்துவிட்டது. உயர்நீதி மன்ற நிகழ்வுகள் தொடர்கிறது. தொலைத் தொடர்பு துறை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினாலும் நாம் தொடர்ந்து வாதாடி நமது கோரிக்கையை வெல்ல முயற்சிப்போம். அதே சமயம்,  நமது பெரும்பாலான உறுப்பினர்கள் 70 வயதைத் தாண்டியவர்கள். ஆகவே, அதையும் கணக்கில் கொண்டு நீதிமன்றம் மூலமாக போராடுகின்ற அதே வேளையில் ஒத்த கருத்துடைய சங்களோடு சேர்ந்து, நாம் முன்னிலை  எடுத்து,தொலைத் தொடர்பு துறையுடன் பேச்சு வார்த்தையும் நடத்தியும், தேவைப்பட்டால் . அமைப்பு நிலை போராட்டம் நடத்தலாம். நமது நோக்கம், விரைவில் பென்ஷன்  ரிவிஷன் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும். 

கோர்ட் அவமதிப்பு வழக்கில் நமது வழக்கறிஞர்கள் தமது வாதத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும். நமது செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை உள்ளதாக அமைய வேண்டும்.

2) வழக்கு நிதி :

 அகமதாபாத் செயற்குழு முடிவின்படி வழக்கு நிதி பல மாநிலங்களிலிருந்து  1.15 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு உறுப்பினர்கள் ரூபாய் 19,36,480 வழங்கியுள்ளனர். அதன் பிறகு பெறப்பட்ட தொகை ரூ.56,425 அனுப்பி வைக்கப்படும்.

ஆகமொத்தம் ரூ.19.93 லட்சம் தமிழ்நாடு உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மாநில சங்கத்தின் மூலமாக இல்லாமல் நேரடியாக மத்திய சங்கத்திற்கு நிதி வழங்கிட அறைகூவல் விடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சரியானதாகப்படவில்லை. ஆகவே இதுவே இறுதியாக இருக்க வேண்டும். 

3) சென்னை சொஸைட்டி பிரச்சனை.

இது  மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட தொகை BSNL நிர்வாகத்தால் சொஸைட்டிக்கு கட்டப்பட்ட போதிலும், நவம்பர் 2018ல் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்களுக்குரிய தொகை, சென்னை சொஸைட்டி நிர்வாகத்தால் வழங்கப்படாமல் 6 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு மாநில சங்கத்தைச் சார்ந்த  2000க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு, ரூபாய் 50,000 முதல் 5 லட்சம் வரை வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது, சென்னை சொசைட்டி செயலிழந்துவிட்டது. ஆகவே, மத்திய பதிவாளர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இரண்டு முறை நமது மாநில சங்கம் அவருக்கு கடிதம் எழுதி உள்ளது. நடுவராக நியமிக்கப்பட்ட Ombudsmanக்கும் விளக்கமான கடிதம் எழுதப்பட்டது. நமது அகில இந்திய சங்கமும் மத்திய பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுவரை பதில் ஏதும் இல்லை. ஆகவே, உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அதற்காக நமது மத்திய சங்கம் முயற்சிக்க வேண்டும். 

4) CGHS : 

1) மதுரையைச் சுற்றி 6 வருவாய் மாவட்டங்கள்  உள்ளன. B1 நகரமான மதுரையில் CGHS Wellness centre அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே சென்னை கூடுதல் இயக்குனர் பரிந்துரை செய்திருந்தார். மேல் நடவடிக்கை ஏதும் இல்லை. நமது தலைமை சங்கம் மதுரையில் Wellness centre துவங்கிட மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் இயக்குனர் CGHS அவர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

 2) Wellness centre மற்றும் Empanelled Hospital இல்லாத பகுதிகளில் வசிக்கும் பல ஓய்வூதியர்கள் CGHS கார்டு பெற்றுள்ளனர். அவர்களின் நலன் கருதி ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் ஒரு Wellness centre துவங்க வேண்டும். அதற்காக நமது சங்கத் தலைமை முயற்சிக்க வேண்டும். 

3)  Wellness centre இல்லாத நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை அங்கீகரிக்க சுகாதாரத் துறை அனுமதி வழங்குவதில்லை. இந்த விதியையும் மாற்ற வேண்டும்.

தற்போது, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு  மருத்துவமனையை அங்கீகரிக்க மத்திய அரசின் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இதனை அமலாக்க வேண்டும். 

4) ஓய்வூதியர்கள் பலர் வெளிப்புற சிகிச்சைக்காக FMA   ரூ.1,000/- மும்,  உட்புற சிகிச்சைக்காக  CGHS Cardம் பெற்றுள்ளனர். அவர்கள் உட்புற சிகிச்சை பெற சென்னை கூடுதல் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற வேண்டி உள்ளது. அவர்கள் வாழும் ஊரில் உள்ள வெல்னஸ் சென்டரில் இருந்து அனுமதி பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். 

5)  BSNL MRS திட்டம் :

இதில் உள்ளவர்கள் உட்புற சிகிச்சை பெற வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் சில  மாவட்டங்களில் புதுப்பிக்கப்படுவது இல்லை. மற்ற மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், பணம் கட்டாமல் சிகிச்சை பெற வாய்ப்பு இல்லை. ஆகவே,

 இப் ரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். BSNL  நிர்வாகத்திடம் இருந்து சரியான வழிகாட்டுதல் பெற வேண்டும். 

6) மருத்துவப் படிகள் வழங்கும் பணிகள் அனைத்தும் டெல்லி  கார்ப்பரேட் அலுவலகத்தால் கையாளப்படுகிறது.

மெடிக்கல் அலவன்ஸ் ரூ.12,000/- வழங்கும்போது வருமான வரி கட்ட தேவையில்லாதவர்களிடமிருந்தும் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.  இது முறைப்படுத்தப்பட வேண்டும். 

7) வாழ்நாள் சான்றிதழ்.

தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்ட சங்கங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஓரிரு மாவட்டங்களில் வெளியே வர இயலாத ஓய்வூதியர்களின் இல்லங்களுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சென்னை தந்தி/ STR பகுதி சார்ந்த முன்னணி தோழர்/ தோழியர்கள் சென்னை CCA அலுவலகம் சென்று அங்கு வருவோர் வாழ்நாள் சான்றிதழ் வழங்கிட உதவி வருகின்றனர். வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டியவர்கள் பட்டியல் மாதாமாதம் வெளியிடப்படுகிறது. 

8) தற்போதுள்ள சம்பான் திட்டத்தில் அரியர்ஸ் வழங்கிட இயலவில்லை. ஆகவே, மேம்பட்ட சம்பான்.2 உருவாக்க வேண்டும்.

மேலும், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் உருவானபோது நிவாரண நிதியாக ரூ.14.72 லட்சம் திரட்டப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

வயநாடு வெள்ள நிதியாக  ரூ.20.01 லட்சம்  திரட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றி. 

குறிப்பு : 

சென்னை சொஸைட்டி பிரச்சனை குறித்து பேசியவுடன் நமது பொதுச் செயலாளர் தோழர் வரப்பிரசாத் அவர்கள், டெல்லியிலே உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தமிழ் மாநில சங்கத்திலிருந்து இது குறித்து அனைத்து விஷயங்களையும் அறிந்த ஒருவரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மாநில சங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அனைவருக்கும் நன்றி.

Sundarakrishnan, CS