அன்புள்ள தோழர்களே தோழியர்களே 02.11.23 வியாழக்கிழமை நமது அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர் பென்ஷன் மாற்றம் குறித்து டெல்லி கேட் வழங்கிய தீர்ப்பின் சாராம்சத்தை விளக்கி சிறப்பு கூட்டம் Y M C A Hall லில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தோழர் கே பி ஆர் தலைமையில் துவங்கியது .
மேற்கு மாவட்ட தோழர் ரமணி தோழர் வேடியப்பன் தோழர் பட்டாபிராமன் மாநில உதவி செயலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் மேற்கு மாவட்ட செயலர் தோழர் பலராமன் தர்மபுரி மாவட்ட செயலர் தோழர். சுப்பிரமணியன் தலைவர் தோழர் முனியன் தோழர் வணங்காமுடி மேற்கு மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
சென்னை தொலைபேசி பொருளாளர் தோழர் கண்ணப்பன் தமிழ் மாநில சிறப்பு ஆலோசகர் தோழர் ராமா ராவ் ஆகியோர் C G H S FMA
Life certificate, Family pension, போன்றவற்றை விளக்கிக் கூறினார்கள்,
சிறப்பு அழைப்பாளர் தோழர் A. சுகுமாரன் முன்னாள் அகில இந்திய துணைத் தலைவர் டெல்லி கேட்டில் வழக்கு போட்டது முதல் ஆவணங்களை தேடி கொடுத்தது மற்றும் தீர்ப்பின் சாரம்சம் முழுவதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் தோழர் கணேசன் தீர்மானத்தை வாசித்தார். தோழர்.p. ராஜா உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழர்K P ராஜமாணிக்கம், தலைவர்,
தோழர் கணேசன் செயலர்,
சேலம் கிழக்கு மாவட்டம்.
No comments:
Post a Comment