Tuesday, 14 March 2023

INFORMATION FROM OUR CIRCLE SECRETARY .

டெலிகாம் மெக்கானிக் LPD குறைப்பு பிரச்சினையில் PCCA டெல்லிக்கு கடிதம் எழுதி அதனுடைய நகலை நமக்கு கொடுப்பதாக ஒத்துகொண்டார். ஆனால் ஒப்புக்கொண்டதற்கு மாறாக பிரச்சினை நகர்வதாக தெரிகிறது.
இன்று அநேகமாக எல்லா அதிகாரிகளும் சொல்வது ஒன்று செய்வது வேராக உள்ளது. நம்பகத்தன்மை இல்லை.
ஆகவே அந்த அநீதியை களைய நீதி மன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை. 
வழக்கை மாநில சங்கத்தின் சார்பாகவும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சார்பாகவும் தொடுக்கலாம்.
பாதிக்கப்பட்ட அனைவரும் வாதிகளாக சேருவது தான் சரியாக இருக்கும்ஏனெனில் நீதி மன்றத்தை நாடியவர்களுக்கு மட்டும் தீர்ப்பு செல்லும் என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.
விதிகள் தெளிவாக இருப்பதால் வழக்கில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். 
வழக்கில் சேர விரும்புவோர் கொடுக்க வேண்டிய தகவல்கள் :-
பெயர்:
வயது :
தகப்பனார் பெயர் :
விலாசம் :
ஓய்வு பெற்ற தேதி : 
முதலில் LPD எவ்வளவு நிரணயிக்கப்பட்டது : 
பின்னர் அது எவ்வளவாக குறைக்கப்பட்டது : 
சம்பளம் எவ்வளவு பிடிக்கப்பட்டது :
 
இது குறித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தால் அந்த நகல், 
நிர்வாகத்திடமிருந்து பதில் வந்து இருந்தால் அந்த நகல்,
 
மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவும்
 
1) மாநில சங்கம் வழக்கு தொடுக்கலாமா?
2) தொடுக்கலாம் என்றால் செலவை எப்படி பகிர்வது?
 
வழக்கு தொடுத்தவற்களுக்கு மட்டும் பலன் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் பாதிக்கபட்ட அனைவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.
அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரித்து அனுப்ப வேண்டும்.
 
உங்களுடைய பதிலை 24/03/2023 க்குள் தெரிவிக்கவும்
 
S Sundarakrishnan
மாநில செயளாளர்


No comments:

Post a Comment