Friday, 6 January 2023

 











05.01.2023 வியாழக்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. தஞ்சை திரு இருதய மலை மாவட்ட பேராலய மக்கள் மன்றத்தில் காலை  பத்து மணிக்கு மாநாடு தொடங்கியது. முதல் நிகழ்வாக தேசிய கொடியை மூத்த தோழர் எஸ் புருஷோத்தமன் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து நமது சங்க கொடியை மாநில செயலர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைக்க வாழ்த்து கோஷங்கள் அனைவரும் எழுப்பினர்.
அடுத்து மாநாடு உள் அரங்கத்தில் ஆரம்பமாகியது. முதல் நிகழ்ச்சியாக தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து பாட தோழியர் லைலா பானு தமிழ்த்தாய் வாழ்த்து கூடியிருந்த தோழர் தோழியருடன் கலந்து பாடினார். மாவட்ட தலைவர் தோழர் எம் ராஜேந்திரன் தலைமை ஏற்றார் மாவட்ட செயலாளர் தோழர் வி சாமிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது வரவேற்பு உரையில் தஞ்சை மாநாடு சிறப்பினை பற்றியும் அதன் வளர்ச்சியை பற்றியும் உரையாற்றி அனைவரையும் வரவேற்றார். அடுத்து தோழர் S. சுந்தரகிருஷ்ணன் மாநில செயலர் வாழ்த்துரை வழங்கி MRS CGHS  பற்றி விரிவான உரையாற்றி, இது காறும் மாநில அளவிலே தீர்த்த பிரச்சனைகளை பற்றியும் தெளிவான உரையாற்றி அமர்ந்தார்.
அடுத்த நிகழ்வாக தோழர் டிஜி, தோழர் ஆர்வி, தோழர் தீனதயாளன் சென்னை,  தோழர் சுந்தர கிருஷ்ணன் மாநில செயலர் ஆகியவர்களுக்கு தஞ்சை பாரம்பரிய முறைப்படி பொன்னாடை போர்த்தி வைக்கப்பட்டு நீண்ட அழகிய சந்தன மாலை அனுபவிக்கப்பட்டு தஞ்சை புகழ் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கும்பகோணம் சார்பாக பொன்னாடை அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தோழர் தீனதயாளன் தோழர் ஆர் வி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினர்.
 தோழர் D. கோபாலகிருஷ்ணன் மத்திய சங்கத் தலைவர் ஓய்வூதிய மாற்றம் பற்றிய நிகழ்வுகளை விளக்கி சுமார் ஒரு மணி நேரம் ஒரு விளக்க உரை ஆற்றி அமர்ந்தார். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலர் பொருளாளர் ஆகியோர் தோழர் DG யால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவப் படுத்தப்பட்டனர்.

மாநில தலைவர் மற்றும் மாவட்ட செயலர் வி. சாமிநாதன் கடந்த 20 ஆண்டு காலமாய் செயலர் பதவி மற்றும் 80 வயது தொடக்கம் ஆகிய ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் பங்கு கொண்டு பொன்னாடை சந்தன மாலை நினைவு பரிசு ஆகியவைகளை அளித்து சிறப்பு செய்து கௌரவித்தார்கள். தவிரவும் திருச்சி மற்றும் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் தோழர் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர். அடுத்து BSNL  உதவும் உள்ளங்கள்  களப் பணியாற்றும் தோழர்கள் மற்றும்  இந்த மாநாட்டிற்காக அல்லும் பகலும் உழைத்த தோழர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப் பட்டார்கள். நிறைவாக தோழர் அய்யனார் நன்றி நவில மாநாடு இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டில்  400 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாநாட்டின் இடையில் அனைவருக்கும் ஸ்னாக்ஸ்ம் டீயும் வழங்கப்பட்டது. நிறைவாக தஞ்சை பாரம்பரிய இன்சுவை மதிய உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

நன்றி. வணக்கம்.
செய்தி தொகுப்பு  
கே சந்தான கோபாலன்
மாவட்ட துணை தலைவர், தஞ்சை.








No comments:

Post a Comment