Sunday, 10 October 2021


 09-10-2021 சனிக்கிழமை, தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாலை 3 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் அமைந்துள்ள நமது சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் தஞ்சை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பாபநாசம் & திருவாரூர் பகுதி களிலிருந்து வந்திருந்து கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

மாவட்ட தலைவர் மதுரை ராஜேந்திரன் தலைமையேற்க மாவட்ட செயலர் சாமிநாதன் முன்னின்று கூட்டத்தை நடத்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கும் சென்ற கூட்டத்திற்கும் இடையில் உயிர் நீத்த உறுப்பினர்கள் மற்றும் விவசாய மாநாட்டில் உயிர் நீத்த தோழர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் முகத்தான் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர்கள் அய்யனார் பட்டுக்கோட்டை சிவி தங்கையன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் ஜெயசீலன் பட்டுக்கோட்டை தோழர் சீனா தானா மற்றும் திருவாரூர் தோழர் நெப்போலியன் தஞ்சை தோழர்கள்  சந்தானகோபாலன் நடராஜன் என் பி2 பன்னீர்செல்வம் தோழியர் சந்திரகுமாரி மட்டும் மன்னை தோழர் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர் பிரான்சிஸ் சேவியர் உரை நிகழ்த்தினார். அடுத்து மாவட்ட செயலர் சாமிநாதன் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.தோழர் கே.சீனு பொருளாளர் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பென்ஷன் அனாமலி கேஸ்-ல் வெற்றி பெற செய்த அனைத்து தலைவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய தோழர் DG அவர்களுக்கும் சிறப்பாக பங்காற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

2.  AIBSNL PWA உறுப்பினர்கள் நமது கூட்டுறவு சொசைட்டி மூலம் அனுபவித்து வரும் இடர்பாடுகளை சரிசெய்யும் வகையில் மாநில மற்றும் மத்திய சங்கம் உறுதியாக இந்த நிலையிலிருந்து மீண்டு வர ஆவன செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. பட்டுக்கோட்டை கிளையிலிருந்து வருடந்தோறும் வசூலிக்கப்படும் நன்கொடை 500 ல் ரூபாய் 400 நன்கொடையை நமது மாவட்ட சங்கத்திற்கு கொடுக்க வேண்டுமாய் தீர்மானிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை கிளையின் முடிவை அறிவிக்கக்கோரி தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் இறுதியாக எம் கணேசன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.




No comments:

Post a Comment