Thursday, 30 April 2020

VRS  PENSIONERS   PLEASE  NOTE.,
I enquired about the non drawal of pension for the VRS retirees with AO Pension.
He informed that it had been processed yesterday and cleared. 
---  Circle Secretary.

Tuesday, 28 April 2020

பி.எஸ்.என்.எல்., நிவாரண நிதி
 Added : ஏப் 27, 2020  23:47
சென்னை:கொரோனா நிவாரண நிதியாக, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில், 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் மாநில தலைவர், ராமாராவ் கூறியதாவது:அகில இந்திய அளவில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச் சங்கம், ஒரு லட்சம் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. சங்கத்தின் சார்பில், தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கொரோனா நிவாரண நிதியாக, பல மாநிலங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; தமிழக முதல்வரிடம், 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு

Monday, 27 April 2020

CCA TN  Order For Payment Of Pension

CCA TN issued order for payment of pension as per enhanced  DA from APRIL 2020 on 9th April 2020 to POSTAL accounts and All CPPCs.As the order was issued during Lockdown period this letter could not have been reached the destination unless it is sent by email.Whereas Postal accounts office is located opposite to CCA Office.CPPCs of SBI,IOB,IndianBank and PNB are only located at Chennai.CPPCs of other banks are located in other states.Had the CPPC receives copy of this letter from the CCAs of respectives Circle, pension might have been drawn with enhanced DA.However poor attendance of the staff in CPPC due to COVID 19 may be the reason for the  drawal of pension as per MARCH.

APRIL 2020 IDA PAYMENT ORDER.

Sunday, 26 April 2020


STR சென்னையின்
பாராட்டத்தக்க 
செயல்பாடு
CORONA நோய் தொற்று ஏற்பட்டதன் விளைவாக, நாடு முழுவதும் அதனால் பாதிக்க பட்டோருக்கு உதவும் பொருட்டு, நிவாரண நிதி திரட்ட நமது அகில இந்திய சங்கம் 29.03.2020 அன்று வேண்டுகோள் விடுத்தது
ஒரு மாதத்திற்குள்ளாகவே ஊரடங்கு காரணமாக வெளியில் செல்ல இயலாத நிலையிலும், on line மூலமாகவே அனுப்ப உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு பிரதமர், தமிழ் நாடு முதலமைச்சர் ஆகியோரின் சிறப்பு நிதிக்கு இன்றைய தேதி வரை ரூபாய் ஆறு லட்சத்திற்கும் மேல் அனுப்ப பட்டுள்ளது. இது நாம் திரட்டி யதில் மாநில அளவில் 54%, அகில இந்திய அளவில் 16% ஒரு மாவட்டம் மட்டுமே இவ்வளவு அதிகமான நிதியை திரட்டி உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய ஒன்று.
இதற்கு அயராமல் பணியாற்றிய மாவட்ட செயலரும் மாநில துணை செயலரும் ஆன தோழர் சுந்தர கிருஷ்ணனு க்கு மாநில சங்கத்தின் பாராட்டுக்கள். மேலும் மாவட்ட தலைவரும் அகில இந்திய சங்கத்தின் துணை தலைவருமான தோழர் சுகுமாரன், பொருளாளர் தோழர் மோகன் ஆகியோரும் இனைந்து செயல்பட்டதின் மூலமாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அள்ளி தந்த உறுப்பினர்களுக்கும் இதில் மகத்தான பங்கு உள்ளது.
இப்போது மட்டுமல்ல எந்த ஒரு இயற்கை பேரிடர் க்கும் முன்னணியில் இருந்து செயல்படுவது STR ன் தனி சிறப்பு.
தொடரட்டும் இந்த புனித பணி            
V.ராமராவ், மாநில தலைவர்
R.வெங்கடாச்சலம், மாநில செயலாளர்
S.காளிதாசன், மாநில பொருளாளர்
25.04.2020

Our CHQ has released a e-Journal of our association APRIL 2020. 
A link has been given below. By clicking the link the e-journal could be read.
Please CLICK here to read the e-Journal.
Our AIBSNLPWA has donated Rs 50 Lakhs towards PM and CM relief fund. The news has appeared in the Times Of India . The same has been posted here.

Wednesday, 22 April 2020


ஏப்ரல் 22-உலக புவி நாள்
இப்படி ஒரு தினம் இருப்பதாக நம்மில் பலர் கேள்வி படாத ஒன்று. ஆனால் CORONA வைரஸ் நோய் இதை இன்றைக்கு நம் நினைவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அமுலில் இருக்கும் ஊரடங்கின் காரணமாக இயற்கை புத்துணர்வு பெற்றுள்ளது. நதிகள், நீர் நிலைகள், காடுகள், மரம் செடி கொடிகள் பூத்து குலுங்குகின்றன.
இந்த நிலையை தொடர்ந்து பாதுகாக்கவும், பூமி தாய்க்கு மரியாதை செலுத்தவும் இன்றைக்கு உறுதி ஏற்போம்
கண்ணுக்கு தெரியாமல் கண்ணா மூச்சி காட்டும் இந்த கொடிய அரக்கனை விரட்டுவோம்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு  ---குறள் 737
ஊற்றும் மழையும்  ஆகிய இரு வகை நீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண் களும் நாட்டிற்கு அங்கங்களாகும்
தோழமையுடன்
V. ராமராவ்,
மாநில தலைவர்
R. வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்.
அன்றைய கூவத்தில்  நீர்வழி போக்குவரத்து
இன்றைய கூவம் கண்ணீர் சிந்தும் கேளிகூத்து .


Tuesday, 21 April 2020


தோழர்களே,
நமது மாநில சங்க கணக்கில் 18.04.20 வரை ரூபாய்
5, 00, 483  CORONA பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வந்ததில் ரூபாய் 4, 00, 000 தமிழக முதலமைச்சரின் நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் On line  மூலமாக பிரதமர், தமிழக முதலமைச்சர் நிதிக்கு ரூபாய் 4, 79, 504 நேரடியாக நம் உறுப்பினர்கள் அனுப்பி உள்ளனர். நன்கொடை மொத்தம் இதுவரை ரூபாய் 9, 79, 987.
பேரிடர் காலங்களில் நமது அமைப்பு மட்டுமே உரிய பங்களிப்பை செய்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளோம். நிலைமை சீரான பிறகு இது மேலும் தொடரும். இது வரை அள்ளி தந்தவர் அனைவருக்கும் நன்றி.
V.ராமராவ்,
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
20.04.2020