Wednesday 22 April 2020


ஏப்ரல் 22-உலக புவி நாள்
இப்படி ஒரு தினம் இருப்பதாக நம்மில் பலர் கேள்வி படாத ஒன்று. ஆனால் CORONA வைரஸ் நோய் இதை இன்றைக்கு நம் நினைவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அமுலில் இருக்கும் ஊரடங்கின் காரணமாக இயற்கை புத்துணர்வு பெற்றுள்ளது. நதிகள், நீர் நிலைகள், காடுகள், மரம் செடி கொடிகள் பூத்து குலுங்குகின்றன.
இந்த நிலையை தொடர்ந்து பாதுகாக்கவும், பூமி தாய்க்கு மரியாதை செலுத்தவும் இன்றைக்கு உறுதி ஏற்போம்
கண்ணுக்கு தெரியாமல் கண்ணா மூச்சி காட்டும் இந்த கொடிய அரக்கனை விரட்டுவோம்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு  ---குறள் 737
ஊற்றும் மழையும்  ஆகிய இரு வகை நீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண் களும் நாட்டிற்கு அங்கங்களாகும்
தோழமையுடன்
V. ராமராவ்,
மாநில தலைவர்
R. வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்.
அன்றைய கூவத்தில்  நீர்வழி போக்குவரத்து
இன்றைய கூவம் கண்ணீர் சிந்தும் கேளிகூத்து .


1 comment:

  1. At New Delhi Air pollution is at the level of what it was about 20 yrs back, as reported by NDTV 24*7 News chl on 23-4-2020.by nnr.tnj. Tku.

    ReplyDelete