Thursday 21 June 2018

மத்திய செயற் குழு முடிவிற்கேற்ப நம் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்தியது அதில் தலைநகராம் சென்னையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முறையில் மாபெரும் எண்ணிக்கை கொண்ட தோழர்களின் உற்சாக வெள்ளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கெங்கு நோக்கிடினும் அங்கெல்லாம் நம் தோழர்கள் அவர்கள் உள்ளங்களில் சங்கத்தின்பால் நம்பிக்கை ஈடுபாடு பொங்கி வழிய காணப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில தலைவர் தோழர் வி.ராமராவ் மற்றும் சென்னை தொலைபேசி மாநில தலைவர் தோழர் முனுசாமி அவர்களின் கூட்டுத்தலைமையில் ,  அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் G. நடராசன் , அகில இந்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் D .கோபாலகிருஷ்ணன் , அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர் T.S. விட்டோபான், தமிழ்மாநில செயலர் தோழர் K. முத்தியாலு , சென்னை  தொலைபேசி மாநில செயலர் தோழர் தங்கராஜ், தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் A. .சுகுமாரன் , NFTE முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபி , சேலம் மாவட்ட முன்னாள் செயலர் தோழர் ரமணி ஆகியோர் பேசினார்கள் . சென்னை தொலைபேசி  மாநில பொருளாளர் தோழர் M. கண்ணப்பன் அவர்களின் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்களின் பேச்சுகளிலிருந்து ஒரு சில கருத்துக்கள் 
ஓய்வூதியத்தையும் , சம்பள மாற்றங்களையும் delink செய்து ஓய்வூதிய மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நம் கோரிக்கையினை சில சங்கங்கள் பின்பற்ற துவங்கியிருப்பது நமக்கு ஒரு சிறு வெற்றி.
நம் சங்க கோரிக்கைகளை மாற்று சங்க தோழர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மிக அதிகமாக நஷ்டம் அடைந்துள்ள BSNL நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது மிக ஐயப்பாடாக உள்ள நிலையில் , ஏழாவது சம்பளக்குழு பரிந்துரைத்துள்ள 32% fitment உடன் நம் ஓய்வூதியம் 1-1-2017 முதல் மாற்றப்பட வேண்டும் என்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். 
அடுத்த சம்பளக்குழுவை மத்திய அரசு 2027ல் அமைத்தால் நமக்கும் automatic ஆக ஓய்வூதிய மாற்றங்கள் அமுல் படுத்தப்படும். 
2026க்குள் அனைத்து DOT ஊழியராக இருந்து BSNL க்கு மாறியவர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள். 
நடக்க இருக்கும் பூரி அனைத்திந்திய மாநாட்டிற்கு முன் நம் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர வேண்டும். 
அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் தர்ணாவிற்கு இன்னும் அதிக அளவில் தோழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
நம் கோரிக்கையை ஏற்று பல நிருபர்கள் தினசரி மற்றும் தொலைக்காட்சி நிறுவங்களிருந்தும் வந்து படங்கள் எடுத்து கோரிக்கை விபரங்களை கேட்டறிந்து சென்றனர்.
                                            
Dinamalar 21-6-18
                    Dinakaran  21-6-18




No comments:

Post a Comment