விபத்து
நேற்று ஊட்டி மலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் பயணிகள் சிலர் மரணமடைந்தனர் பலர் பலத்த காயம் அடைந்து துடித்தனர். அவ்வாறு காயம் அடைந்தவர்களில் நம் ஊட்டி தோழர் தேவேந்திரன் (2017 ல் ) ஓய்வுபெற்ற டெலிகாம் மெக்கானிக் மனைவி திருமதி பானுமதி அவர்களும் ஒருவர். ஊட்டி அரசு மருத்துவ மனையில் முதலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கால் எலும்புகள் முறிந்து போய் மிகவும் அபாயகரமான நிலைமையில் இருந்த படியால் உடனடியாக கோயம்புத்தூர் கொண்டுசெல்லப்பட்டு கங்கா ஆஸ்பத்திரியில் தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளார். அவர் விரைவில் பூரண குணம் அடைந்து விடு திரும்பி பழையபடி வாழ்க்கையைத் துவங்க பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment