Friday, 22 June 2018

                    தஞ்சையில் 
        ஓய்வூதியர்
           குறை களைய சந்திப்பு

இன்று (22 -6- 2018) தஞ்சை GMT BSNL  அலுவலகத்தில்,  ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் சந்திப்பு மாலை 3 மணிக்கு நடைபெற்றது.  
PGMT  திரு வினோத் அவர்கள் முன்னிலை வகிக்க AGM ( நிர்வாகம்) CAO  (நிதி ) மற்றும் AO ( ஓய்வு ஊதியம்) ஆகியோர் நிர்வாகத்தின் தரப்பிலும்,  தோழர் V.சாமிநாதன் மாவட்ட செயலர் தோழர் K. சந்தான கோபாலன் துணைத் தலைவர் தோழர் K. சீனு பொருளாளர்,  தோழர் மாரியப்பன் நிதி ஆலோசகர் தோழர் சேவியர் ஆகியோர் தஞ்சை BSNL  ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பிலும் கலந்து கொண்டனர்.

மொத்தம் 18 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் மூன்று கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்தது. மீதமுள்ள 15 கோரிக்கைகள் Pr.CCA மற்றும் CPPC அலுவலகங்களில் நிலுவையில் உள்ளன. தஞ்சை GMT  அலுவலகத்தில் எந்த ஒரு கோரிக்கையும் நிலுவையில் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டது.
 நமது சங்கத்தின் சார்பாக PGMT BSNL தஞ்சை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கூட்டம் இனிதே முடிவுற்றது
வாழ்க BSNL !                                             வாழ்க AIBSNLPWA!!!  
இப்படிக்கு
கே சந்தான கோபாலன்
 துணைத் தலைவர்
தஞ்சை மாவட்ட BSNL  ஓய்வூதியர் நலச்  சங்கம்,
 தஞ்சை.


No comments:

Post a Comment