The list contains 66 pages. So a link is given below. By clicking the link, the names and relevant particulars can be seen.
Tuesday, 27 December 2022
Saturday, 24 December 2022
Monday, 19 December 2022
சென்னையில்
தமிழ் மாநில மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து நடத்திய கூட்டு போராட்டம்.
19-12-2022 அன்று
காலை 10.30 மணிக்கு சென்னை பூக்கடை பஜார் தொலைபேசி நிலைய வளாகத்தில் ,ஏழாவது மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியர்களுக்கும்
01-01-2017 முதல் அளிக்க வேண்டி , நம் அகில இந்திய சங்கத்தின் அறைகூவலுக்கு ஏற்ப தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இரண்டும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பின்னர்
ஓய்வூதியர்கள் நாள் கொண்டாடப்பப்பது . சுமார் 500 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்திழும் , பின்னர் நடைபெற்ற கூட்டத்திலும்
கலந்து கொண்டார்கள் . கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும்
நம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.
ஜனவரி
2023 ல் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்னும்
திரளாக ஓய்வூதியர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்கள். நிகழுக்களில் எடுக்கப்பட்ட நிழற் படங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
Sunday, 18 December 2022
நமது மாவட்ட சங்கம் சார்பாக ஓய்வூதியர் தின கூட்டம் பாளை சுபம் மண்டபத்தில் மாவட்ட தலைவர் தோழர் சம்மனசு தலைமையில் துவங்கியது. நமது மாவட்ட சங்கத்தின் ஆலோசகர் மூத்த தோழர் T.ஆவுடைநாயகம் வரவேற்புரை நல்கினார். தொடர்ந்து தோழர் கோமதி சங்கர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் சம்மனசு தமது தலைமை உரையில் இன்றைய ஓய்வூதியர் தின முக்கியத்துவம் பற்றியும் நமது மாவட்ட சங்கத்தின் நிகழ்வுகள், மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் கூறினார். ஓய்வூதிய மாற்றம் கோரிக்கை வைத்து 19.12.2022 அன்று நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். தமது சிறப்புரையில் சிறப்பு அழைப்பாளரும் மாநில செயலருமான தோழர்.
S. சுந்தரகிருஷ்ணன் சமிபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகள் பற்றியும் BSNL ஊதியம் மாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றத்திற்கான அவசியம் பற்றியும் நமது fitment கோரிக்கைகளின் பின்னணி, வரவிருக்கும் போராட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மெடிக்கல் பில்கள் பட்டுவாடா செய்ய மாநில சங்கம் எடுத்த முயற்சிகள், நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் மாநில மட்டத்தில் எடுக்கப்பட்ட பிரச்சினைகள், வங்கி - சம்பாண் ஓய்வூதிய மாறுதல், FMA வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், CGHS திட்டத்திற்கு ஓய்வூதியர்களின் மாற்றம் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 70,80 வயது பூர்த்தி ஆன நமது சங்க ஓய்வூதியர்களை மாநில செயலர் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கௌரவித்தது பாராட்டினர். தோழர் E. கனகராஜ் 19.12.2022ல் நடைபெறவிருக்கும் ஆர்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
நிர்வாக தரப்பில் DGM (Admin) திரு வீராசாமி, IFA திரு கண்ணன் இருவரும் கலந்து கொண்டனர்.




































