Sunday, 19 December 2021

 




சேலம் கிழக்கு மாவட்ட மாநாடு
சிறப்பான மாநாடு!
6 வது சேலம் கிழக்கு மாவட்ட மாநாடு பென்ஷனர் தினத்தையும் இணைத்து மாவட்ட தலைவர் தோழர் ரங்கன் தலைமையில் 17.12.2021 அன்று நடை பெற்றது. 30க்கும் மேற்பட்ட தோழியர்கள் உட்பட 220 பேர் பங்கு கொண்டனர்.
மாநாட்டில் 70,75,80,85 வயது நிறைந்த 49 தோழர்கள், சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் பொருளாளர் தோழர் கண்ணப்பன், தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் ஆர்வீ இணைந்து சால்வை அணிவித்து கௌரவிக்க பட்டனர். மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம் செயல் பாட்டு அறிக்கையை மிக சிறந்த முறையில் தொகுத்து அவைக்கு சமர்ப்பித்தார். மத்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் எடுத்து தீர்த்து வைத்த பிரச்சனைகளை பட்டியல் இட்டத்துடன், பென்ஷன் Anomaly வழக்கில் நாம் பெற்ற வெற்றி, பென்ஷன் ரிவிசன் வழக்கு பற்றிய விவரங்களை கோர்வையாக தொடுத்து இருந்தார். சுருக்கமாக சொல்ல போனால், ஒரு ஆவனமாக வைத்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அதே போல் மாவட்ட சங்க வரவு, செலவு அறிக்கை யும் பொருளாளர் தோழர் மோகன் சிறந்த முறையில் தயாரித்து அளித்தார். இரண்டும் மாநாட்டில் ஒப்புதல் பெற பட்டது.
மாநாட்டை வாழ்த்தி தர்மபுரி மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் முறையே தோழர்கள் முனியன், சுப்பிரமணியன், வணங்காமுடி  ஆகியோர் உரையாற்றி னர். சேலம் NFTE மாவட்ட செயலாளர் தோழர் பாலகுமாரின் சிறப்பானதொரு உரை அனைவரின் பாராட்டை பெற்றது. அகில இந்திய அளவிலும், மாநிலத்திலும் நமது உறு ப்பினர் எண்ணி க்கயை குறிப்பிட்டு இன்றைக்கு இவ்வளவு பெரிய அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றும், திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவர்களை கொண்டுள்ள இயக்கம் என்று புகழ்ந்து உறைத்தார். சென்னை தொலை பேசி மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் CGHS, FMA, பென்ஷன் Anomoly வழக்கில் மூத்த தோழர்கள் அடைந்த பலன் ஆகியவற்றை விளக்கி பேசினார்.
இறுதியில் முடிவுரையாக பேசிய மாநில செயலாளர் மாவட்டத்தின் மூத்த தோழரும், அனைவராலும் மதிக்க படுகின்ற தோழர் PKB, மற்றும் மாவட்ட சங்கதின் வேண்டுகோளை ஏற்று மாநில மாநாட்டை கிழக்கு மாவட்டம் சேலத்தில் நடத்தலாம் என்ற மாநில சங்கத்தின் ஏக மனதான முடிவை மாநில தலைவர் தோழர் ராமாராவ் ஒப்புதலோடு அறிவிப்பதாக அவைக்கு தெரிவித்த போது அனைவரும் பலத்த கர ஒலியோடு வரவேற்றனர்.
மாவட்ட சங்கத்தின்
கௌரவ தலைவராக தோழர் P.K. பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவராக தோழர் K. P. ராஜ மாணிக்கம்,
மாவட்ட செயலராக தோழர் M. கணேசன்,
மாவட்டபொருளாளராக தோழர் P.ராமலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் வாழ்த்தி அவர்கள் பணி சிறக்க தமிழ் மாநில சங்கம் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். மாவட்ட செயலாளர் பொறுப்பேற்ற தோழர் கணேசன் நன்றிநவில மாநாடு நிறை உற்றதாக மாநாட்டை தலைமை ஏற்று நடத்திய தோழர் ரங்கன் அறிவித்தார்.










Friday, 17 December 2021

 

AIBSNLPWA THANJAI DISTRICT.
இன்றைய ஓய்வூதியர் தின கூட்டத்தின் தொகுப்பு.
அனைவருக்கும் வணக்கம். இன்று தஞ்சை BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டத்துடன் ஓய்வு ஊதியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இன்று காலை 10.30  மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2 மணி அளவில்  நிறைவு பெற்றது
தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும அவர்தம் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்றிட மாவட்ட செயலர் கூட்டத்தினை கௌரவத் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தினார். முதலில் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் எம் இருதயராஜ் துணைத் தலைவர் கொடியினை அனைவரது வீர வணக்கத்துடன் மற்றும் கோஷங்களுடன் ஏற்றி வைத்தார்தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட கூட்டத்தின் தலைவர் முன்னுரை ஆற்றினார். பிறகு தோழர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்ற தொடர்ந்து சென்ற ஒன்றரை வருடங்களாக நடைபெறாத மணி விழா காட்சிகள் மற்றும் பிறந்தநாள் விழா காட்சிகள் நடந்தேறின. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மணிவிழா காட்சிகளும் பத்துக்கு மேற்பட்ட பிறந்த தின காட்சிகளும் நடைபெற்றது.
பிறகு ஓய்வு தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. தலைவர் முன்னுரைக்கு பின் தோழியர் லைலா பானு அவர்கள் இந்த ஒன்றரை வருட காலத்தில் இயற்கை எய்திய அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் இயற்கை எய்திய அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் இயற்கை எய்திய அனைத்து வகை உறுப்பினர்களுக்கும்  ஒரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அடுத்து தோழர் கே.சந்தானகோபாலன் துணைத் தலைவர் நமது ஓய்வூதியர்கள் தின முக்கியத்துவத்தையும் காரண காரியங்களையும் பிறகு ஏற்பட்ட நல்ல சாதனைகளையும் இனி வருங்காலத்தில் நமது சங்கம் செயலாற்ற வேண்டிய சாதனைகள் பற்றியும் விரிவாக உரை நிகழ்த்தினார்மாநில துணைப் பொருளாளர் வாழ்த்து செய்தி நல்கினார்மாநில அமைப்புச் செயலாளர் தனது வாழ்த்துரையில் ஓய்வு ஊதியர் தின முக்கியத்துவம் பற்றியும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார். அடுத்து மாவட்ட செயலர் ஓய்வூதியர் தின முழு வரலாற்றையும் அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரையில் உள்ள நிகழ்வுகளை மிக அழகாக தனது உரையில் விளக்கி உரையாற்றி நிறைவு செய்தார். 2022 ஜனவரி முதல் மாதாந்திர கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என அறிவித்தார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி உரை நவில மதிய தஞ்சை பாரம்பரிய உணவு பரிமாறிய பிறகு கூட்டம் இனிதே நிறைவேறியது.
வாழ்க ஓய்வூதியர் நல சங்கம், வளர்க அவர்களது பணி நன்றி, வணக்கம்.
V. சுவாமிநாதன் ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA ,
தஞ்சாவூர் மாவட்டம்