அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்,
சேலம் மேற்கு மாவட்டம்.
தோழர்களே,தோழியர்களே,
நமது சேலம் மேற்கு மாவட்ட சங்கத்தின் 19ம் ஆண்டு பேரவைக் கூட்டம் 19/06/2024 புதன்கிழமை அன்று சேலம் தமிழ்ச் சங்க கல்யாண மண்டபத்தில் இனிதே நடந்தேறியது.
வாழ்த்து முழக்கங்களுடன் நமது தேசியக்கொடியை அகில இந்திய தலைவர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றினார்.
நமது சங்க கொடியை மாநில தலைவர் தோழர் V.சுவாமிநாதன் அவர்கள் ஏற்றினார்.
அரங்கினில் பேரவைக் கூட்டம் தொடங்கியது. இறை வணக்கத்தை தோழர் அழகரசன் பாடினார். பின்னர் நமது மறைந்த உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நமது மாவட்ட தலைவர் M.கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
01/04/2023 முதல் 31/05/2024 வரையிலான செயற்குழு ஒப்புதல் பெற்ற செயல்பாட்டு அறிக்கையினை, நமது மாவட்ட செயலர் தோழர் R.பலராமன் வாசித்து பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றார்.
பின்னர் நமது மாவட்ட பொருளாளர் தோழர் M.ராமசாமி அவர்கள்
தணிக்கை செய்யப்பட்ட செயற்குழு ஒப்புதல் பெற்ற 2023-24 ஆண்டுக்கான வரவு செலவு கணக்கினை வாசித்து பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றார். அகவை 70 மற்றும் 80 நிறைவு பெற்ற நமது உறுப்பினர்கள் நினைவு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்
பின்னர் மாநில உதவி செயலர் தோழர் K.ரமணி, மாநில உதவி செயலர் தோழர் T.வேடியப்பன், கிழக்கு மாவட்ட செயலர் தோழர் M.கணேசன், தலைவர் K.P.ராஜமாணிக்கம், தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் R.சுப்ரமணியம், தலைவர் தோழர் C.முனியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நமது மாநில சங்க கௌரவ ஆலோசகர் தோழர் V ராமராவ் அவர்கள் வாழ்த்துரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அடுத்து நமது மாநில தலைவர் தோழர் V.சுவாமிநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றினார். நமது அழைப்பினை ஏற்று வந்து சேலம் பொதுமேலாளர் திருமதி டாக்டர் C.P.சுபா அவர்கள் வாழ்த்துரை வழங்கி நமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை பற்றி விவரித்தார்.
நமது மாநில செயலர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் நமது நிலுவையிலுள்ள நமது பிரச்சினைகள் பால் அவர் எடுத்து வருகின்ற முயற்சிகள் பற்றியும் விளக்கி சிறப்புரை ஆற்றினார். தோழியர் லதா அகில இந்திய உதவி பொருளாளர் மற்றும் R . வெங்கடாச்சலம் மாநில துணைத் தலைவர் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி பேசினார்கள் மேடையில் இருந்த அனைத்திந்திய மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மேலாளர் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். ஹைதராபாத் சென்றுள்ள தோழர் கே.முத்தியாலு அவர்கள் , அகில இந்திய துணைத் தலைவர் , அதி கன மழை காரணமாக தம்மால் வர இயலவில்லை என்று கூறி " ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற தம்முடைய வாழ்த்துக்களை " செய்தியாக தோழர் R .பலராமன் , மாவட்ட செயலருக்கு அனுப்பியுள்ள செய்தி மேடையில் வாசிக்கப்பட்டது.
அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் முதலில் நமது அகில இந்திய செயலர் V.வரப்பிரசாத் அவர்கள் அகில இந்திய செயல்பாடுகள் பற்றியும் ஓய்வூதிய மாற்றத்தின் தற்போதைய நிலையைப் பற்றியும் நெடிய சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நமது அகில இந்திய தலைவர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வூதிய மாற்றம் குறித்து புள்ளி விவரங்களோடு வழக்கின் தற்போதைய நிலையைப் பற்றியும் நெடிய சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதிய மாற்றம் குறித்த இருவரின் உரையும் நமக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அனைத்து தோழர் தோழியருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நமது அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் P.வேணுகோபால் அவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை வாசித்து நிறைவுரையாற்றினார்.
இன்றைய ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் தோழர் P . வேணுகோபால் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
தோழர் T .S . ரகுபதி , மாவட்ட துணைத் தலைவர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தேசீய கீதத்தோடு 19ம் ஆண்டு பேரவைக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
வாழ்க ஓய்வூதியர் நலச் சங்கம்! வளர்க ஓய்வூதியர் ஒற்றுமை!!
வணக்கம்!
தோழமையுடன்
R.பலராமன்
மாவட்ட செயலர்

சேலம் மேற்கு
No comments:
Post a Comment