Saturday, 26 August 2023

 26 8 2023  சனிக்கிழமை தஞ்சை மாவட்ட AIBSNLPWA சங்கம்  14வது அகில இந்திய சங்கத்தின் அமைப்பு தினத்தையும் மற்றும் இந்த மாத மாதாந்திர கலந்துரையாடல் கூட்டத்தையும் சிறப்பாக நடத்தியது

 தோழர் வீ. சாமிநாதன் மாநிலத் தலைவர் மற்றும் தோழர் முத்தியாலூ மத்திய சங்க துணை தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நமது சங்கக்கொடியை நமது மாவட்ட கௌரவ தலைவர் தோழர் கே தனபாலன் ஏற்றி வைத்தார். தலைவரின் முன்னுரைக்குப் பிறகு மாவட்ட செயலாளர் . அய்யனார் வரவேற்பு உரை ஆற்றினார். சென்ற மாத கூட்டத்திலிருந்து இன்று வரை உயிர் நீத்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த மாதம் மணிவிழா பிறந்தநாள் அமைந்த தோழர் தோழியருக்கு வழக்கம்போல் அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களுக்கிடையே சந்தன மாலை அணிவிக்கப்பட்டு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. அடுத்து மாநில தலைவர் தோழர் வீ. சாமிநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்பு விருந்தினர் உரையில் அகில இந்திய சங்கத்தின் அமைப்பு தின வரலாற்றினை வெகு விமர்சையாக உரையாற்றி அமர்ந்தார். அடுத்து அகில இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் இன்றைய கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் தோழர் . முத்தியாலு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்பு உரையில் நமது அகில இந்திய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றினையும் இன்றுவரை அது ஆற்றிய சாதனைகளையும் வரலாறுகளையும் மிகத் தெளிவாக அனைவரது கவனத்தையும் ஈர்க்குும் வகையில் சிறந்ததோர் உரையாற்றி அமர்ந்தார். நமது ஓய்வூதிய மாற்றம் குறித்தும் மற்றும் நாம் இதுவரை ஆற்றிய சாதனைகள் பற்றியும் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் மத்திய சங்கத்தின் இன்றைய நிலைமையை பற்றியும் சிறப்பான ஒரு உரையாக அமைந்தது.

மாவட்ட செயலர் தனது தொகுப்புரையில் மாவட்டத்தின் சாதனைகளையும் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் இன்றைக்கு தேவையான எடுக்கவேண்டிய நிலைகள் பற்றியும் தெளிவானதொரு தொகுப்புரை வழங்கி தனது உரையை நிறைவேற்றினார்.

 தோழர் டி பன்னீர்செல்வம் இணைச் செயலர் நன்றியுரை நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது. தஞ்சை பாரம்பரிய இன்சுவை மதிய விருந்துடன் கூட்டத்தில் கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொள்ள இன்றைய நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

கே சந்தான கோபாலன்
முதன்மை ஆலோசகர்
AIBSNLPWA    THANJAI.



No comments:

Post a Comment