இன்று 10.09.2022 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்க பெற்று நண்பகல் 1
மணிக்கு நிறைவு பெற்றது. இன்றைய கூட்டத்தை 75 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். முதல் நிகழ்வாக தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து பாடிட தோழர் மலை ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்றிட நமது மாநில தலைவர் தோழர் வி .சாமிநாதன் முன்னிலை வகித்திட தோழர் க. அய்யனார் வரவேற்புரை நிகழ்த்திட தோழர் தோழியர்கள் கே. சந்தான கோபாலன், பிரான்சிஸ் சேவியர், எம் இருதயராஜ்,மல்லிகா சுகுமாரன், பத்மினி ,லைலா பானு, நாகராஜன், பாஸ்கரன், மன்னை தோழர் முகமது யாசின், நடராஜன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
அனைத்து தோழர்களும் தோழியர்களும் இன்றைய நமது சங்கத்தின் செயல்பாடுகளை பற்றியும் நடைபெற இருக்கின்ற தஞ்சை மாவட்ட மாநாடு சிறப்புற நடைபெற தங்களது கருத்துக்களையும் வருகின்ற அகில இந்திய மாநாடு பற்றிய தங்களது கருத்துக்களை தெளிவாக பதிவு செய்தனர். நிறைவாக தோழர் வி. சாமிநாதன் மாநில தலைவர் தெளிவான ஒரு விளக்க உரை அளித்து அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து நமது ஓய்வு ஊதிய மாற்றம் மற்றும் எம் ஆர் எஸ் பேமெண்ட் சம்பந்தமாக நமது மாவட்ட ஜி எம் டி அவர்களை சந்தித்து எம் ஆர் எஸ் பேமெண்ட் சிறந்த முறையில் அளிப்பதற்கான வழிவகைகளை தனது உரையாடலில் விளக்கி எம் ஆர் எஸ் பேமென்ட் இந்த முறை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உறுதியளித்து உரையை நிறைவு செய்தார். முன்னதாக இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிறப்பாக வாழ்த்து கோஷங்களுடன் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது. தவிரவும் நமது மாநில சங்கத்தின் சார்பாக நடைபெறும் தர்ம காரியங்கள் மதிய உணவு அளித்தல் தீபாவளி உடை இனிப்பு காரம் மற்றும் பொங்கல் விழா சிறப்புற நடைபெற அனைவரும் தாங்களால் இயன்ற பொருள் உதவியோ உடைகள் வழங்கியோ தங்களது கொடையினை சிறப்பாக செய்வதற்காக மாவட்ட சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் மனப்பூர்வமான வேண்டுதல் வைக்கப்பட்டது. தோழர் தோழியர் இப்பொழுது முதலே தங்களது நன்கொடைகளை அளித்து தர்ம காரியங்களை தொடங்கி விட்டனர். அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக இதய பூர்வமான நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
வருகின்ற மாவட்ட மாநாட்டில் தோழியர் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கவும் எல்லா உறுப்பினர்களும் தவறாது வருடாந்திர நன்கொடை சந்தாவான ரூபாய் 500 ஐ தவறாமல் செலித்திட வேண்டுகோள் வைக்கப்பட்டு ஒத்துழைப்பு நல் குமாறு வேண்டுகோள் விடுகப்பட்டது. அவ்வாறு செலுத்த தவறும் தோழர் தோழியருக்கு இதுக்கு மேற்பட்டு மாவட்ட மாநாடு நினைவு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது மற்றும் சந்தா நிலுவையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் இறுதி அடைந்த நிலையில் ரூபாய் இரண்டாயிரம் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக அளிக்கப்படும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட மாட்டாது என்பதை தீர்மானமாக நிறைவேற்றி உள்ளோம். ஆகையால் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்கி நமது மாவட்ட சங்கத்தில் இது காறும் நடைபெற்று வரும் நற்காரியங்களை தடைபடாமல் நடைபெற உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வாக்குக்கு இணங்க ஒத்துழைப்பு நல்லுகுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்தின் நிறைவாக தோழர் கே சீனு பொருளாளர் நன்றி நவில வழக்கம்போல் நமது தஞ்சை பாரம்பரிய இன்சுவை மதிய உணவுடன் இன்றைய கூட்டத்தின் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. நன்றி.
தோழமை வாழ்த்துக்களுடன்
இன்றைய கூட்டத்தின் தொகுப்பு by
கே சந்தான கோபாலன்,
மாவட்டத் துணைத் தலைவர், AIBSNLPWA THANJAI DISTRICT.
No comments:
Post a Comment