Sunday 13 December 2020

 


                                          சிவகங்கையில் AIBSNLPWA  சிறப்பான கூட்டம் 13-12-2020
கொரோனா ஊரடங்கு  உள்ளடங்கு அறிவிப்பிற்குப் பின் முதன் முறையாக நமது மாவட்டத்தில் சிவகங்கைக்கிளை தனது கூட்டத்தை நடத்தியது பாராட்டுதலுக் குரியது. 65 உறுப்பினர்களில் 40 பேர் கலந்து கொண்டது சிறப்புக்குரியது. திரு.இராமமூர்த்தி அவர்கள் இறை வணக்கம் பாடினார்.
திரு.K.குமார் அவர்கள் தலைமையேற்க செயலர் சந்திரன் அவர்கள் அஞ்சலி மற்றும் வரவேற்புரை நிகழ்த்தினார்.
Ø கிளைமாநாடு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.
Ø VRS-ல் சென்ற தோழர்களின் பிரச்னைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
குமார் அவர்கள் தனது தலைமைஉரையில் ஓய்வு பெற்றபின் அனைவரையும்  சந்தித்து உரையாடுவது புத்துணர்ச்சியை தருகிறது எனக் குறிப்பிட்டார். இந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியைப் பார்க்கும் பொழுதெல்லாம் பழைய நினைவுகள் தோன்றுவதை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.
மாவட்டத்தலைவர் முருகன் அவர்கள் காரைக்குடி SSA மதுரை வணிகப்பகுதியில் சேர்க்கப்பட்ட பின் உறுப்பினர்கள் படும் கஷ்டங்கள் பற்றியும் சங்கத்தின் அவசியம் பற்றியும் சங்கம் தோன்றிய சூழ்நிலை பற்றியும் குறிப்பிட்டார்.
மாவட்டச்செயலர் நாகேஷ்வரன் அவர்கள் :-  ஓய்வூதியர் தினத்தின் சிறப்பு மற்றும் வரலாறு..IDA முடக்கத்தாலும் விலைவாசி குறியீட்டெண் அடிப்படை ஆண்டை மாற்றியதாலும் நாம் அடையும் பாதிப்புகள் பற்றி பேசினார். நமது பொதுச்செயலரின் தொடர்ச்சியான முயற்சிகளால் இன்று முழுமையாக இல்லாவிட்டாலும் 31-03-2019 வரையிலான மெடிக்கல் பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்டார்.
NFTE மாவட்டச்செயலர் மாரி அவர்கள்:-  எத்தனை போட்டிகள் இருந்தாலும், 4G கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டாலும், குறைந்த அளவு பணியாளர்களை வைத்து BSNL இன்று லாபத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதை புள்ளி விபரங்களோடு  எடுத்துக்காட்டினார். 4G இல்லாமல் சாட்டிலைட் மூலம்  சேவைதர முயற்சித்துக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். நிதி அமைச்சகம் BSNL/MTNL மூடிவிடலாம் என்ற திட்டத்திலிருந்த பொழுது அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் அமீத் ஷா அவர்களின் உதவியுடன் நிதிஅமைச்சக திட்டத்தை முறியடித்தது பற்றியும் குறிப்பிட்டார். VRS-ல் சென்ற தோழர்களின் ஓய்வூதியக் குறைப்பு...ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நடராஜன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.


No comments:

Post a Comment