Saturday 21 March 2020

அன்புத் தோழர்களே ,
வணக்கம்.
உலகமெங்கும் கொரானா வைரஸ் நோய் தன் கோரப்பிடியினை மனித உயிர்களின் மேல் தாக்கி மரணமடையச் செய்து வருகிறது .  இந்தியாவிலும் , தமிழ்நாட்டிலும் கொரானா வின் தாக்கம் இருப்பதாக செய்திகள் வருகின்றன .தமிழ்நாட்டில் ஒரு சிலர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.
இந்நோய் மனிதர்கள் மூலமாக , காற்றில் பறந்து தாக்குகிறது .60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களை கொரானா வைரஸ் மிக சுலபமாக தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்நோய்க்கு இன்றுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் .
இந்நோய் பரவுவதை தடுக்க நாம் வீட்டிலேயே இருந்து விட்டால் நம்மை காத்துக் கொள்ள முடியும். 
நம் பாரத பிரதமரும் தம் தேசிய பரப்புரையில் நாளை , 22-03-2020 ஞாயிறு காலை 7-00 மணியிலிருந்து இரவு 9-00 மணிவரை வெளியில் எங்கும் போகாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் படி கூறியுள்ளார்.
 அதைப்போல நாமும் ஞாயிறு அன்று எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மையும் , நாட்டையும் கொரானா நோயிலிருந்து பாதுகாப்போம் .
இந்த அறிவுரை செய்தியை நம் தோழர்கள் , மற்றும் அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கும் எடுத்துக் கூறி அறிவுறுத்தவும்.
நம் நலம் காப்போம் !        நம் தேசத்திற்கு  வளம்   சேர்ப்போம் !! 
தோழமை வாழ்த்துக்களுடன் 
V. ராமராவ் , 
 மாநில தலைவர் ,  
R .வெங்கடாச்சலம்
 மாநில செயலர்,
மற்றும் சங்க நிர்வாகிகள் 
AIBSNLPWA 
தமிழ் மாநிலம்.








1 comment:

  1. Sir, Timely request. Prevention is better than cure. Separation, Isolation and quarantine. To achive, control of community Transmission is best choice of isolation from others as indicated by other countries. tku. By.nnr.tnj.

    ReplyDelete