Monday 9 March 2020


இன்று 7 3 2020 சனிக்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் முகத்தான் சிறப்பானதொரு கூட்டத்தையும் பட்டிமன்றத்தையும் வெற்றிகரமாக நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு.
இன்று காலை 9 45 மணிக்கு நிகழ்வுகள் திரு இருதய மறைமாவட்ட பேராலய மக்கள் மன்றம் கல்குளம் நாஞ்சிக்கோட்டை சாலை தஞ்சாவூரில் வெகுவிமர்சையாக நடந்தது. முதலாவதாக தலைவர் மதுரை ராஜேந்திரன் கூட்டத்தை துவங்கி வைக்க தோழியர் சியாமளா தேவி கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் மாரியப்பன் தமிழ்தாய் வாழ்த்து இசைத்திட்டார். தோழர் சிவசிதம்பரம் வரவேற்புரை ஆற்றினார். காலம்சென்ற இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடம் மௌனம் காத்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள். தோழியர் சந்திரகுமாரி தலைமை உரையில் மகளிர் தின சிறப்பு பற்றியும் மகளிரின் இன்றைய நிலையைப் பற்றியும் அழகானதொரு உரையாற்றினார்கள் பிறகு தோழர் சிவி தங்கையன் பட்டுக்கோட்டை தலைமையில் பெண் விடுதலை பாரதியின் கனவு என்ற தலைப்பில் நிறைவேறியிருக்கிறது என்ற அணியில் தோழர் . அய்யனார், தோழர் என் நடராஜன், தோழியர் மல்லிகா சுகுமாரன் நிறைவேறவில்லை என்ற அணியில் தோழர் முகிலன் தோழியர் பத்மினி தோழியர் அருட்செல்வி ஆகியோர் வாதிட்டனர் இறுதியாக பெண் விடுதலை பாரதியின் கனவு நிறைவேறவில்லை என்ற தீர்ப்பு டன் பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
அடுத்து நமது சிறப்பு அழைப்பாளர் திருமதி ஜானகி ரவீந்திரன் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தஞ்சை மாநகராட்சி பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அவர் தனது உரையில் பெண்களின் நேற்றைய நிலை இன்றைய நிலை நாளை வரலாறு படைக்க படவேண்டிய நிலை பற்றியும் மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து கலந்து கொண்டதன் காரணத்தால் சுத்தம் ஆரோக்கியம் பற்றியும் சிறப்பான உரையை நிகழ்த்தினார். அடுத்து நமது மத்திய சங்க துணைச் செயலர் தோழர் . முத்தியாலு
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அவர் தனது உரையில் மகளிர் தினத்தின் சிறப்பு பற்றியும் நமது மத்திய சங்கம் ஆற்றிய சாதனை நிகழ்வுகளையும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பற்றியும் ஓய்வு ஊதியம் மாற்றம் இன்றைய நிலை பற்றியும் விளக்கமாக உரை நிகழ்த்தி அமர்ந்தார். அடுத்து தோழியர் வி. ரத்னா மத்திய சங்க உதவி பொதுச்செயலாளர் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது உரையில் மகளிர் தின முக்கிய நிகழ்வுகளை பற்றியும் இனி நாம் செயல்படவேண்டிய காரண காரியங்கள் பற்றியும் இன்றைய நமது மத்திய சங்க செயல்பாடுகள் பற்றியும் ஒரு நிறைவான உரையை நிகழ்த்தினார். முடிவாக தோழர் கே. சந்தான கோபாலன்  நன்றிஉரையாற்றினார். மதிய சிறப்பு தஞ்சை பாரம்பரிய விருந்திற்கு பிறகு மகளிர் தின விழா சீரும் சிறப்பாக நிறைவேறியது. கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் ஒரு கைப்பை நினைவு பரிசாக வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 
கே.சந்தானகோபாலன்.
துணைத் தலைவர்,
மாவட்ட சங்கம்,
தஞ்சாவூர்.


 



இன்று 8 3 2020 இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இன்றைய கூட்டத்தின் சிறப்பு அம்சமே விஆர்எஸ் ல் ஓய்வுபெற்ற அனைத்து உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டமாக நடத்தியது தான். தஞ்சை மேரிஸ் கார்னர் மெயின் தொலைபேசி வளாகத்தில் தலைவர் எம் ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் வீ. சாமிநாதன் முன்நின்று கூட்டத்தை நடத்தினார்.  தோழர் சாமிநாதன் நமது சங்கத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் அதன் சாதனைகளையும் புதிதாக இணைய வந்துள்ள உறுப்பினர்களுடன் கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரம் விரிவாக விளக்கமாக  உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவானதொரு உரையாற்றி நிறைவு செய்தார்.. வழக்கம்போல் மணிவிழா தம்பதியினர் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக்கு வெட்டப்பட்டு வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களுடன் விழா கொண்டாடப்பட்டது. நேற்று நடைபெற்ற உலக மகளிர் தின விழா சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .நிறைவாக அய்யனார் இணைச் செயலர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை சிறப்பு உணவுடன் இனிதே நிறைவேறியது.
வாழ்க,
வளர்க,
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.
 





No comments:

Post a Comment