Monday 1 July 2019


இராமநாதபுரத்தில் கிளைமாநாடு மற்றும் மாவட்டசெயற்குழு கூட்டம் 9-ந்தேதி நடைபெற்றிருக்க வேண்டிய கூட்டம்........
தோழர் முத்தியாலு அவர்களின் உடல்நலக் குறைவால் தள்ளிப்போடப்பட்டு (30-06-2019)- ஞாயிறன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக சங்கக்கொடியேற்றம்,  தொலைபேசி நிலையம் முன்பாக ஏற்றிவைக்கப்பட்டது. தோழர் சிக்கந்தர் ஷா அவர்கள் 0930 மணியளவில் கொடியேற்றிவைத்தார்.
காலை 10-00 மணிக்கு கிளைமாநாடு கிளைத்தலைவர் தோழர் சண்முகம் அவர்கள் தலைமையில் துவங்கியது. தோழர்  வரதன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். செயலர் தோழர்  ராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

NFTE மாவட்டச்செயலரும் ஓய்வூதியர் கணக்கதிகாரியாக பல்லாண்டு பணியாற்றி ஓய்வூதியர்களுக்கு பலவகைகளில் உதவிசெய்தவருமான வெ.மாரி அவர்கள் மாநாட்டை துவக்கிவைத்தார். ஆண்டறிக்கையும் நிதிஅறிக்கையும் வாசிக்கப்பட்டது சங்கத்தின் பெயரில் வங்கிக்கணக்கு துவக்கப்படவேண்டும் என்ற உறுப்பினர்களின் ஆலோசனை ஏற்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 
மாநில துணைத்தலைவர் தோழர் .ஜெயச்சந்திரன் அவர்கள் நிர்வாகிகள் தேர்வை  நடத்தி வைத்தார்.

தோழர்.சண்முகம் அவர்கள் தலைவராகவும், தோழர். இராமமூர்த்தி அவர்கள் செயலராகவும்தோழர் முனியசாமி அவர்கள் பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியலை தோழர் C.கோபிநாதன் முன்மொழிய தோழர் S.கோபிநாதன் வழிமொழிந்தார். நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டச்செயலர் .தோழர் நாகேஷ்வரன், மாவட்டத்தலைவர். தோழர்  முருகன்
காரைக்குடி கிளைச்செயலர் தோழர் சுந்தரராஜன், பரமக்குடி கிளைச்செயலர் தோழர் இராமசாமி, சிவகங்கை கிளைச்செயலர் தோழர். சந்திரன் BSNLEU தோழர் லோகுSNEA தோழர் தவசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில துணைத்தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் அவர்களும், அகில இந்திய உதவி பொதுச்செயலர் தோழர் அருணா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர்.
தோழர் காந்தி அவர்கள் நன்றி கூறி கிளைமாநாட்டை முடித்துவைத்தார்.
25 மகளிர் உட்பட 170 பேர் கலந்து கொண்டனர்

மாவட்டச்செயற்குழு மதியம் 02-50 மணிக்கு மாவட்டத்தலைவர் தோழர் முருகன் மற்றும் மாவட்டத் துணைத்தலைவர்  தோழர் K, குமார் அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. 
செயல்பாட்டறிக்கையை மாவட்டச்செயலர் வாசித்தார். நான்கு திருத்தங்களுடனும் மூன்று சேர்ப்புகளுடனும் செயல்பாட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அக்டோபர்-2018 முதல் மார்ச்-2019 வரைக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக்கணக்கு ஒரு பகுதியாகவும் 15-11-2018 (மாவட்டமாநாடு நடந்த தேதி)  முதல் 29-06-2019 வரைக்கான வரவுசெலவுக்கணக்கை ஒரு பகுதியாகவும் கொண்ட நிதிஅறிக்கையை மாவட்டப்பொருளர்தோழர்  பூபதி அவர்கள் தாக்கல் செய்தார். இரண்டு இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

காரைக்குடி  SSA மதுரை வணிகப்பகுதியுடன் இணைவது பற்றியும் மாவட்டசங்க புலனம் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன.

மாநிலதுணைத்தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் அவர்களும் மத்தியசங்க உதவிபொதுச்செயலர் தோழர் அருணா அவர்களும் ஆலோசனைகள் நல்கி விவாதத்தை முடித்து வைத்தனர்.
மாவட்ட செயற்குழு முடிவுகள்

1). மாவட்ட செயற்குழு பற்றிய அறிவிப்பை SMS/Whats APP-ல் போடுவதோடு செயற்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமும் தெரிவிக்கவேண்டும்

2). மாவட்டசங்க புலனத்தில் பதிவிடப்படும் செய்திகளில் கட்டுபாடு கடைப்பிடிக்கப்படவேண்டும்
அநாவசிய/தேவையற்ற பதிவுகளை அடிக்கடி பதிவிடும் உறுப்பினர்களிடம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டிக் கொள்ளவேண்டும். கிளைச்சங்க செய்திகளை அதிகம் பதிவிடவேண்டும். ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஒரு குழு நிர்வாகி நியமிக்கப்படவேண்டும்.

3) காரைக்குடி SSA மதுரை வணிகப்பகுதியுடன் இணைவதை முன்னிட்டு காரைக்குடி SSAபகுதிகளில் உள்ள ஓய்வூதியர்களின்  குறை களைய காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் Welfare Officer
நியமிக்கப்படவேண்டும் .ஓய்வூதியர்களின் ID கார்டு மெடிக்கல் கார்டு போன்றவைகளை புதிதாகப்பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் மெடிக்கல் பில் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காரைக்குடி அலுவலகத்திலேயே வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.

4).மாவட்டசெயற்குழுவில் கலந்து கொள்ளும் மாவட்டசங்க நிர்வாகிகளுக்கு பயணப்படி தரப்படவேண்டும்.





No comments:

Post a Comment