Saturday 16 February 2019

Thuththukudi Delegares  Meet MP
15-02-2019:
நமது அகில இந்தியச் சங்கத்தின் அறிவுறுத்தலின்பேரில், AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாகத்  தூத்துக்குடி  பாராளுமன்ற உறுப்பினர் திரு.J. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அவர்களைஇன்று இரவு 7:00 மணியளவில் 

தோழர்கள் எம்.ஜீவானந்தம் (மா.துணைத் தலைவர்), எஸ்.பால்சாமி (மா.பொருளாளர்),  எம்.பர்னபாஸ் (மா.இணைச் செயலர்), கே.சித்திக் உமர் (மா.இணைச் செயலர்), எஸ். முருகராஜ் (உறுப்பினர்)
ஆகியோர் அவரது சிதம்பரநகர் அலுவலகத்தில் சந்தித்து CHQ வின் குறிப்பாணையைத் ((memorandum) தந்தோம்.

"BSNL உருவாகும்போதே மத்திய அரசின் பென்சன் கணக்கீடு மற்றும் அனைத்து சலுகைகளும்  உங்களுக்குத் தருவதாக அரசு வாக்குறுதி தந்ததனால்தானே நீங்கள் BSNL ல் இணைந்தீர்கள்
BSNL வேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லையே
அரசுதானே அதை உருவாக்கி உங்கள்மீது திணித்தது. கொடுத்த வாக்குறுதியை அரசு இப்போது எப்படி மீறமுடியும்"  
என்று எடுத்த எடுப்பிலேயே பிரச்சனையின் சாராம்சத்தை அவர் பேசியதுடன், "எனது ஆதரவு உங்களுக்கு உண்டு.
நான் பரிந்துரை செய்து கடிதம் தயார்செய்து விரைவில் தருகிறேன்" என்ற மகிழ்ச்சியான தகவலையும் தந்தார்
கடிதத்திற்காகக் காத்திருக்கிறோம்!

No comments:

Post a Comment