Saturday, 30 June 2018

Today 10 Employees of BSNL  Cuddalore SSA have retired on superannuation .   A grand fitting farewell function was conducted by Cuddalore BSNL administration  under the Presidentship of Sri Jayakumar Jayavel ,GMT, BSNL, CUDDALORE.
On behalf of our district AIBSNLPWA ,Cuddalore District. Secretary Com.R.Asokan honoured all ten retirees.
We feel very glad to announce that SIX out of ten retirees have joined our Association as Life Members. We welcome all comrades with folded hands.
Their names are given below.
Comrades;
 Jayakumar    AGM, Nemidoss OS ,. Kandeepan TT, Gubendran TT , Murugan TT and  Paramasivam TT .
With the inclusion of this six members in our fold, the total number has gone to 743


தஞ்சை AIBSNLPWA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் V.சாமிநாதன் அவர்கள் 26 6 2018 அன்றுநடைபெற்ற  நெல்லை மாவட்ட  BSNL ஓய்வூதியர்கள் நலசங்க மாவட்ட மாநாட்டில் தோழர் சாமிநாதன் அவர்களில் 40 ஆண்டுகால தொடர் சமூக சேவையினைப் பாராட்டி சமூக சேவை சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பிறகு தோழர் சாமிநாதன் ஏற்புரை ஆற்றினார. அதில் தனது தொடர் 40 ஆண்டுகால சமூக சேவையின் நினைவலைகளை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். தஞ்சை மாவட்ட BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கம் தனது மாவட்டச் செயலர் தோழர் V. சுவாமிநாதன் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் இன்னும் அவரது சமூகப் பணி தொடரவும் வாழ்த்துகிறது.
CLICK HERE TO SEE OTHER PHOTOS

Friday, 29 June 2018

Pension Disbursement Direct From CCA .




From 1st July 2018 onwards IDA is increased by 0.8%.
The Consumer Price INDEX has increased from 127.2% to 128%. 
So the increase in IDA is by 0.8%.



Wednesday, 27 June 2018


A New branch of AIBSNLPWA has been formed on 27-06-2018 in  Ariyalur, Trichy District  with 40 Members.  Coms. V.P Kathaperumal Dist President, T.Selvaraj Dist Secy,  Veerasamy Dist Secretary Madurai,  Dist Treasurer Rajamani,
RV ACS  attended and graced the function.
Coms. G.Veerasamy, R.Arumugam and Shiekh Dawood have been elected as President,Secretary & Treasurer respectively. Com.Balakrishnan TT, who retires on 30th June on super annuation  has  joined as Life member in our Association. We welcome him whole heartedly.
Coms.S.Palaniappan, All India Vice President, P,Sundaram Dist President NFTE also attended and felicitated  the new branch.



இன்று திரு பி சண்முகம் DGM ( Finance ) PGMT BSNL  அலுவலகம் தஞ்சை அவர்கள் தனது ஓய்வு (30 6 2018) பெறுவதை முன்னிட்டு மதிய உணவு விருந்தளித்து சிறப்பித்தார்கள். இதில் நமது தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பில் தோழர்  கே  தனபாலன் தலைவர் , தோழர்  கே சந்தான கோபாலன்  துணைத் தலைவர்  தோழர் கே சீனு  பொருளாளர்  உட்பட  மற்றும் 25 அங்கத்தினர்கள் கலந்துகொண்டு விழா நாயகனை சிறப்பித்தோம்.
பணி ஓய்வு பெறும் தோழர் பி சண்முகம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தோம் தோழர் சண்முகம் அவர்கள் 01-0 7- 2018 முதல் நமது ஓய்வூதிய சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக விருப்பம் தெரிவித்து நம்முடன் நமது சங்கத்தில் சேர்ந்து சிறந்த முறையில் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது AIBSNL ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
வாழ்க பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்!!! 
இப்படிக்கு
தோழமை வாழ்த்துக்களுடன்
கே சந்தான கோபாலன்
துணைத் தலைவர்
தஞ்சை மாவட்ட BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கம்


Tuesday, 26 June 2018

அனைத்திந்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று மதுரை மாவட்ட சங்கம் 20-06-2018 அன்று காலை 1030 மணி அளவில் மதுரை முதன்மை பொது மேலாளர் BSNL  அலுவலக வளாகத்தில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தியது சுமார் 120 ஓய்வூதியர்கள் ( மகளிர் உட்பட)  மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விண்ணதிரும் கோஷங்கள் முழங்கப்பட்டன . போராட்டத்தின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழ்க AIBSNLPWA !         வளர்க்க ஓய்வூதியர் ஒற்றுமை.!!

Friday, 22 June 2018

                    தஞ்சையில் 
        ஓய்வூதியர்
           குறை களைய சந்திப்பு

இன்று (22 -6- 2018) தஞ்சை GMT BSNL  அலுவலகத்தில்,  ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் சந்திப்பு மாலை 3 மணிக்கு நடைபெற்றது.  
PGMT  திரு வினோத் அவர்கள் முன்னிலை வகிக்க AGM ( நிர்வாகம்) CAO  (நிதி ) மற்றும் AO ( ஓய்வு ஊதியம்) ஆகியோர் நிர்வாகத்தின் தரப்பிலும்,  தோழர் V.சாமிநாதன் மாவட்ட செயலர் தோழர் K. சந்தான கோபாலன் துணைத் தலைவர் தோழர் K. சீனு பொருளாளர்,  தோழர் மாரியப்பன் நிதி ஆலோசகர் தோழர் சேவியர் ஆகியோர் தஞ்சை BSNL  ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பிலும் கலந்து கொண்டனர்.

மொத்தம் 18 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் மூன்று கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு முடிவுக்கு வந்தது. மீதமுள்ள 15 கோரிக்கைகள் Pr.CCA மற்றும் CPPC அலுவலகங்களில் நிலுவையில் உள்ளன. தஞ்சை GMT  அலுவலகத்தில் எந்த ஒரு கோரிக்கையும் நிலுவையில் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டது.
 நமது சங்கத்தின் சார்பாக PGMT BSNL தஞ்சை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கூட்டம் இனிதே முடிவுற்றது
வாழ்க BSNL !                                             வாழ்க AIBSNLPWA!!!  
இப்படிக்கு
கே சந்தான கோபாலன்
 துணைத் தலைவர்
தஞ்சை மாவட்ட BSNL  ஓய்வூதியர் நலச்  சங்கம்,
 தஞ்சை.