Puducherry monthly
meeting.
புதுச்சேரி மாதாந்திரக் கூட்டம் 10-06-2017
ஒவ்வொரு மாதமும்
இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 10-06-2017
அன்று கூட்டம் நடந்தது. 66 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
திரு.S.யேசு, மாவட்ட
உதவித் தலைவர் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக
மறைந்த தலைவர் குருஜி என அழைக்கப்படும் கனகசொரூபன் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
திரு.N. கங்காதரன், Ex-MLA , S..யேசு, N. பட்டாபி, .M..கிருஷ்ணசாமி, S. சதாசிவம்,
ACT, D..அன்பழகன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.
அடுத்து 80 அகவை பூர்த்திஎய்திய திரு.K. செல்வராஜ்,
CTS(Rtd) அவர்களுக்கு S.யேசு சால்வை அணிவித்து கெளரவித்தார். அவரை வாழ்த்தி திருவாளர்கள்
N.கங்காதரன், Ex-MLA, S. சதாசிவம், ACT, S..யேசு, M. வைத்திலிங்கன், ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் கடந்த மாதம் ஓய்வுபெற்ற திரு
D. முனிரத்தினம், திரு.D..வரதராஜு, திரு.K.கணேசன், TM Rtd) ஆகியோரும், திரு. L..ஜான், TM(Rtd), திரு.K..கோபி, TM
(Rtd), திருமதி.M.பிரேமா, R.ருக்குமணி ஆகிய குடும்ப ஓய்வூதியர்களூம் சேர்த்து 7 பேர்
ஆயுள்சந்தா உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு
சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். இவர்களைச்
சேர்த்து தற்போது ஆயுள்சந்தா உறுப்பினர் சேர்ப்பு 184 ஆனது ( அதிகாரிகள்:36, STS/SSS: 56, TM: 63,
Family Pensioner: 29 ). ஆண்டுசந்தா உறுப்பினர்
இல்லை. 78.2 நிலுவை பெற்றவர்கள் நன்கொடைகளை
வழங்கினர்.
மாநில உதவிபொருளாளர்
S..சதாசிவம் தனது உரையில் - தற்போது வழங்கப்பட்ட
பென்சன் மாற்றலில் சில தவறுகள் உள்ளது அதை செயலரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறினார்.
மேலும், சம்பள அனாமலி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு பற்றியும் மூன்றாவது சம்பள மாற்றம்
பற்றி மாற்று சங்கம் கிடைக்காது என கூறியுள்ளதை சுட்டிக்காடினார்.
மாவட்டச் செயலர்
தனது உரையில் ; ஆயுள் சந்தா உறுப்பினர் அடையாள அட்டை பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டது என்றும், 78.2 நிலுவைத் தொகை
இதுவரை 45 தோழர்களுக்கு கிடைத்துள்ளது, அதில் 27 பேர் நன்கொடை கொடுத்துள்ளனர். இன்னும் 2007-க்கு முன்பாக 27 பேர்களுக்கும்,
2007-க்குப்பிறகு 40 பேர்களுக்கும் கிடைக்க வேண்டியதுள்ளது. இப்பிரச்சனையில் மாநிலச்
செயலர் அந்தந்த அதிகாரிகளுக்கும், வங்கிகளுக்கும் கடிதம் மூலம் கடிதம் எழுதியும் நேரடியாக
அணுகியும் துரிதப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நம் நன்றிகள். அடுத்த மாதம் நடைபெற
உள்ள அதாலத்திற்கு 8 பிரச்சனகளை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 3-வது சம்பள மாற்றம் சம்பந்தமாக
CPSU-வில் உள்ள 12 துறைகளுடன் நடந்த பேச்சுவார்த்தை அதில் நமது துறைச் செயலர் வாயைத்
திறக்காமல் இருந்தது, பிறகு BSNL தனது கடிதம் மூலம் affordability நிர்ணயம் BSNL-க்கு
பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. உறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவருக்கு
சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து மே- மாதத்தில் 14
தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் லோகநாதன்
நன்றி கூறினார்.
No comments:
Post a Comment