Wednesday 9 March 2022

 

08/03/2022 அன்று கடலூர் பகுதியின் ஏழாவது ஆண்டு விழாவும் மற்றும் உலக மகளிர் தின சிறப்புக் கூட்டம் திருப்பாப்புலியூர் வணிக வைசிய பஜனை மண்டபத்தில் நடைபெற்றது.

தோழர் V. லோகநாதன் மாவட்ட சங்க நிர்வாகி துவக்க உரை ஆற்றினார். உலக மகளிர் தினம் சிறப்பு கூட்டத்திற்கு தோழியர் V விஜயலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். தோழியர்கள்S. செல்வராசு மேரி, T. ராஜகுமாரி, B. ராஜேஸ்வரி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி கடலூர் இணைப்பேராசிரியை முனைவர் திருமதி குழந்தை தெரஸ்

பாத்திமா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மகளிர் தினம் தோன்றிய வரலாறு மற்றும் படிப்படியாக மகளிர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதையும், பெண்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் எதையும் எதிர் கொள்வர்களாக மாறி வரும் சூழலில் அவர்கள் பணியிடங்களில் மற்றும் பொது வெளிகளில் வெளிப்படுகின்ற விமர்சனங்களை புறந்தள்ளி மேலும் முன்னேற வேண்டும் என்கின்ற அவரது அவாவினைப் பகிர்ந்து கொண்டார். தோழியர் N ரேவதி அவர்கள் வாழ்த்துரை மற்றும் நன்றியுரை ஆற்றினார்.

மாநாட்டிற்கு தோழர்.P சாந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.  கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G அசோகன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். கடலூர் பகுதி பொருளாளர் தோழர் N செல்வராஜ் அவர்கள் வரவு செலவு அறிக்கையினை படித்தார். 2 அறிக்கைகளும் ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் A. ஜெயக்குமார், தோழர் K இளங்கோவன் மற்றும் சிதம்பரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G S குமார், விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் G கணேசன், விருத்தாச்சலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் M ராஜலிங்கம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்டத் தலைவர் தோழர் P ஜெயராமன் மற்றும் மாவட்டச் செயலாளர் தோழர் R அசோகன் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர்கள் B கந்தசாமி, D ராஜேந்திரன், R நந்தகுமார் ஆகியோர்கள் முறையே பகுதி தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், பகுதி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏறத்தாழ 150 தோழர்கள் தோழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அது கடலூர் பகுதி பொறுப்பாளர்கள் உத்வேகத்துடன் செயல்பட ஊக்கமளித்தது. இறுதியாக தோழர் B கந்தசாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்




No comments:

Post a Comment