JULY MONTH MEETING OF
THANJAVUR DISTRICT
தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல்
ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் பொதுக்கூட்ட நிகழ்வுகளின்
தொகுப்பு.
13-07-2019 காலை பத்து முப்பது மணிக்கு
மாதாந்திர கலந்துரையாடல் பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட
தோழர்களும் தோழியர்களும் கூட்டத்தில் பங்குபெற்று சிறப்பித்தனர். மாவட்டத் தலைவர்
தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச்
செயலர் மற்றும் தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் முன்னிலையில் தோழர் வி .சாமிநாதன்
மாவட்ட செயலர் முன்னின்று கூட்டத்தினை சிறக்க நடத்தினார். முதல் நிகழ்வாக தமிழ்
தாய் வாழ்த்து இசைத்திட தோழர் க .அய்யனார் இணை செயலர் வரவேற்பு நிகழ்ச்சி அனைத்து
தோழர்களையும் தோழியர்களையும் வரவேற்று
உரையாற்றினார். பிறகு தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் இந்த மாத
கூட்டத்தின் முக்கிய நிகழ்வினையும் நோக்கத்தினையும் வலியுறுத்தி பேசி நாம் நமது
பிஎஸ்என்எல் தஞ்சை முதன்மை பொது மேலாளர் திரு சி.வி .வினோத் அவர்களின்
வேண்டுகோளிற்கு இணங்க நாம் அனைவரும் நம்மாலான நன்கொடை வழங்கி தஞ்சையில் FFTH பிராட்பேண்ட் சேவையை தொடங்கி சிறப்பிக்க வேண்டும் என
வேண்டுகோள் விடுத்து உரையை நிறைவு செய்தார். அடுத்து தோழர் பிரின்ஸ் செயல் தலைவர்
நாம் ஒவ்வொருவரும் தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கி பிராட்பேண்ட் அபிவிருத்திக்கு உதவிட வேண்டும் என்றும்
அதுமட்டுமல்லாமல் நமது தஞ்சை மாவட்ட வைப்பு நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சம்
வழங்கிட அனைவரும் ஒருமனதாக அனுமதி வழங்கிடவும் வேண்டி உரையை நிறைவு செய்தார்.
அனைவரது ஒருமுகமான ஒப்புதலுடன் ரூபாய் ஒரு லட்சத்தை முதல் தவணையாக நமது மாவட்ட
செயலர் இன்னும் இரண்டொரு தினங்களில் நமது முதன்மை பொது மேலாளர் இடம் வழங்கவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு தோழர் எம். இருதயராஜ் FTTH broadband ன் தேவையை விளக்கி பேசினார். தோழர்
பட்டுக்கோட்டை வீரபாண்டியன் நமது சங்கம் ஆற்ற வேண்டிய கடமைகளையும் எவ்வாறு வங்கி
கடன்களிலிருந்து நமது டெர்மினல் பெனிபிட்ஸ் களை காப்பாற்றிட நாம் ஆற்ற வேண்டிய
கடமைகளைப் பற்றிய கோரிக்கையை முன்வைத்து சிறப்புரையாற்றினார். தோழர் நடராஜன் இந்த
மாத பென்ஷன் பத்திரிகா சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினார். தோழர் கே.
சந்தானகோபாலன் ida, income tax
return 31.07.2019குள் செய்ய வேண்டியது பற்றியும் நமது இன்றைய pension revision பற்றி நமது மத்திய சங்கம் செய்துள்ள
செயல்களையும் விளக்கிப் பேசினார். தோழர் பட்டுக்கோட்டை சி.வி .தங்கையன்FFTHன் சாதக பாதகங்களை விளக்கி நாம் நன்கொடை வழங்குவதோடு
அல்லாமல் ffth வினியோக பணியினை சிறக்க
செய்ய வேண்டியது பற்றியும் விளக்கமாக பேசினார். தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர்
தனது உரையில் வருகின்ற 28 7 2019 அன்று நமது அகில இந்திய
துணைத் தலைவர் தோழர் D.கோபாலகிருஷ்ணன் தஞ்சைக்கு
ஒரு திருமணத்திற்காக வருவதாகவும் அன்றைக்கு மாலை நாலு மணி அளவிலே தஞ்சை ராஜசேகர
திருமண மஹாலில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திட ஒப்புதல் பெற்று அன்றைய
தினம் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் பல
உடனடி செய்திகளை அறிந்துகொள்ள வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். நமது
சங்க வரலாற்றினையும் நமது தலைவர்கள் சிறப்பறிய ஆற்றிய செயல்களையும் தியாகங்களையும்
போற்றி உரையை நிறைவு செய்தார். இன்றைய கூட்டத்தில் சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற 15 தோழர்களுக்கும் தோழிகளுக்கும் மற்றும் பத்துக்கும்
மேற்பட்ட தோழர் தோழியரின் பிறந்தநாள் விழாவும் வழக்கம்போல் சந்தன மாலை அணிவித்து
பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் இனிதே கொண்டாடப்பட்டது.
மற்றும் சென்ற மாதம் வர இயலாத விடுபட்டதோழர் தோழியர் செப்டம்பர் 19 1968 மற்றும் அகவை எழுவது, 75 பூர்த்தி செய்தவர்களின் பாராட்டுப் பத்திரமும் பொன்னாடையும் ஷில்டும்
வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
Ffth broadband சேவையின் விரிவாக்கத்திற்கு இன்றைய
கூட்டத்திலேயே ரூபாய் 36 ஆயிரத்து 200 வசூல் ஆகியது குறிப்பிடத்தக்கது. இது தவிர மாவட்ட செயலர்
சாமிநாதன் தனது ஒரு மாத ஓய்வு தொகையான ரூபாய் 25410/=மற்றும் தோழர் S.
சுப்பையா CTO தஞ்சை அவர்கள் தனது ஒரு மாத ஓய்வூதியத் தொகை ரூபாய்
27216/=மனம் உவந்து நன்கொடை அளித்திருக்கிறார்கள். அந்த 2 தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும்
தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். தோழர் கே.சீனூ மாவட்ட பொருளாளர் நன்றி நவில
கூட்டம் இனிதே முடிவுற்றது. வழக்கம்போல் தஞ்சை சிறப்பு மதிய விருந்து வடை
பாயசத்துடன் இனிதாக நடைபெற இந்த மாத உணவு செலவான ரூபாய் ஐந்து ஆயிரத்தை மண்ணை
தோழர் நடராசன் SDOT,Mng ஓய்வு அவர்கள் வழங்கி
கல்சிறப்பித்தார்கள். அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றியினை உரித்தாக்குகிறோம்.
No comments:
Post a Comment