இன்று கடலூர் மாவட்ட AIBSNLPWA -வின் செயற்குழு கூட்டம் விழுப்புரம் பகுதி
சார்பில் மாவட்ட தலைவர் .தோழர்.P.ஜெயராமன் தலைமையில். விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் பகுதி
உதவி தலைவர்.K.வீரராகவன் வரவேற்பு
உரையாற்றினார். விழுப்புரம் பகுதி சார்பில் AIBSNLPWA ஆற்றிவரும் சிறந்த பணிகளை பற்றியும் BSNL ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் வழங்க வேண்டிய பென்ஷன் மாற்றம் பெற்றிட நம் சங்க
தலைவர்கள் மத்திய அரசு அமைச்சர்கள் ,
DOT அதிகாரிகளை சந்தித்து
பேச்சு வார்த்தை நடத்திவரும் விபரங்கள் குறித்தான நோட்டீஸ் ஒன்றையும் அனைவருக்கும்
வழங்கினர். கூட்டத்தில் com.PJ ,மாநில துணைத்தலைவர் K.சந்திரமோகன்,
மாவட்ட செயலாளர்.தோழர்.R.அசோகன் , தோழர். K.இளங்கோ ,மற்றும் தோழர்கள்.
திண்டிவனம்.நாராயணசாமி, சிதம்பரம்.ஜெயகுமார், செஞ்சி மகாலிங்கம், மற்றும் செயற்குழு
தோழர்களும் அமைப்புநிலை பற்றி யும் ,தங்கள்.பகுதி பிரட்சனைகளை
பற்றியும் உரையாற்றினர். இன்றைய தேதியில்
மாவட்ட சங்கத்தின் ஆயுள்.சந்தா உறுப்பினர்கள் எண்ணிக்கை 817 என்றும் வருட சந்தா உறுப்பினர்கள் 4 , பென்ஷன் பத்த்ரிக்கா ஆயுள் சந்தா எண்ணிக்கை 210 என்றும்.மாவட்ட பொருளாளர் தோழர். ஹாஜா கமாலுதீன் தெரிவித்தார்.
மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒரு விளக்கமான அறிக்கை ஒன்றை செயலாளர் தோழர்.அசோகன்
மாவட்ட செயலாளர் வாசித்தார். மாநில தலைவர்.தோழர்.V.ராமராவ் சிறப்புரையாற்றினார். இன்றைய கூட்டத்தில் அனைத்து
செயற்குழு உறுப்பினர்களும் ,சிதம்பரம்,திண்டிவனம் செஞ்சி,கள்ளக்குறிச்சி,கடலூர்,விருத்தாச்சலம்,உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் ,பகுதிகளில் இருந்து முன்னணி தோழர்கள் தோழி யர்கள் 70 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில்
விழுப்புரம் பகுதி செயலாளர்.தோழர் தக்ஷிணாமூர்த்தி நன்றி உரையாற்றினர். கூட்ட
ஏற்பாடுகளை விழுப்புரம் பகுதி முன்னணி தோழர்கள். துரை பாபு ,ஜோ.வெற்றி , கலி வரதன்,ஜெயபால்,நரசிம்மன் ,சண்முகசுந்தரம் ராமானுஜம் மிக சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தனர்.மதியம்.சுவையான விருந்தும் வழங்கப்பட்டது.விழுப்புரம் பகுதியின்
சார்பில் நினைவுப்பரிசு மாநில தலைவருக்கும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
(மாவட்ட
சங்கத்தின் சார்பாக தோழர். NT)
900
AIBSNLPWA Cuddalore
No comments:
Post a Comment