ஏ ஐ
பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் தஞ்சை
மாவட்ட முப்பெரும் விழா நிகழ்வு பற்றிய தொகுப்பு.
இன்று 8 6
2019 இரண்டாம்
சனிக்கிழமை மாதாந்திர பொது கூட்டத்துடன் முப்பெரு விழாவும் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் இரண்டு மணி வரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
இன்றைய முப்பெரும்
விழா 1. தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் வெள்ளி விழா இதழ் வெளியீடு. 2. 1968 செப்டம்பர்
19 போராட்டத்தில் களம் கண்ட வேங்கைகளுக்கு பாராட்டு விழா 3. அகவை
70 நிறைவு அகவை 75 நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவுடன் இந்த மாதம் ஓய்வுபெற்ற 7 உறுப்பினர்களின் மணி விழா மற்றும் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியர்கள் பிறந்தநாள் விழா ஆகியவை இன்றைய முப்பெரும் விழாவின் முக்கிய அம்சங்கள்.
இன்றைய விழாவிற்கு
சிறப்பு விருந்தினராக தோழர் எஸ் அருணாச்சலம் மத்திய சங்க உதவி பொதுச் செயலாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலர் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக நமது சங்க கொடியினை தோழர் எஸ். அருணாச்சலம் நமது சிறப்பு அழைப்பாளர் தோழர் தோழியர்களின் மிகுந்த ஆரவார கோஷத்தோடு தொலைபேசி வளாகத்தின் நுழைவாயிலில் ஏற்றி வைத்தார்கள்.
முதல்
நிகழ்வாக தோழியர் சாரதா சந்தானகோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே. அய்யனார் இணைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் வீ. சாமிநாதன் நமது பொதுச்செயலாளர்
மத்திய சங்கம் தோழர் க.முத்தியாலு பூர்ண
உடல் நலம் பெற்று திகழ்வதற்கான கூட்டு பிரார்த்தனை அனைத்து உறுப்பினர்களின் பிரார்த்தனையோடு நிகழ்த்தினார்.
தோழர் எஸ்
அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளர் தஞ்சை ஓய்வூதியர் கதிரவன் வெள்ளிவிழா இதழை வெளியிட அதனை தோழர் ஏ.கே. தனபாலன்
கௌரவத் தலைவர் முதல் இதழை பெற்றுக்கொள்ள அனைத்து கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் கர கோஷத்தோடு நிகழ்வு
நடைபெற்றது. தோழர் வீ.சாமிநாதன் மாவட்ட
செயலர் ஓய்வூதியர் கதிரவன் வரலாற்றையும் அது சம்பந்தப்பட்ட செய்திகளையும் பிரதம விருந்தினரான தோழர் எஸ். அருணாச்சலம் அவர்களை வரவேற்றும் சிறப்பானதொரு உரையாற்றி அமர்ந்தார். அடுத்து தோழர் பிரின்ஸ் செயல் தலைவர் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் டி முருகேசன் மாநில
உதவிப் பொருளாளர் ஆகியோர் விழாவினை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்து 19 9 2018 போராட்டத்தில் களங்கண்ட
வேங்கை களுக்கும் அகவை 70 மற்றும் 75 நிறைவு பெற்ற தோழர்களுக்கும் தோழிகளுக்கும் முறையே 1968 போராட்டத்தில் பங்குபெற்று சிறப்பித்த உறுப்பினர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அகவை
70 நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடையும் அகவை 75 நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடையும் ஷில்டும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் இன்றைய முப்பெரும் விழாவில் கவுரவிக்கப்பட்டார்கள். இந்த காட்சி அங்கத்தினர்களின் கரகோஷத்துடன் கண்கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றது. தவிரவும் ஏழு ஜோடிகளுக்கு மணி விழாவும் 15 க்கும் மேற்பட்ட பிறந்தநாள் கண்ட தோழர் தோழியர்களுக்கும் வாழ்த்து கோஷங்கள் முழங்கிட சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக் வெட்டப்பட்டு வெகு சிறப்பாக இனிய முறையில் கொண்டாடப்பட்டது.
அடுத்து பிரதம
விருந்தினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தோழர் எஸ் அருணாச்சலம் உதவிப் பொதுச் செயலர் மத்திய சங்கம் சிறப்பானதொரு நிறைவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தற்போதைய நமது சங்கத்தின் செயல்பாடுகள் எம் ஆர் எஸ் இன் இன்றைய நிலை மற்றும் நமது pension ரிவிஷன் போராட்ட நடைமுறைகள் அதை நாம் எப்படி போராட்டம் நடத்தி அடைய இருக்கிறோம் அதைப் பற்றிய நமது நிலை என்ன வருங்காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பன போன்ற பல அரிய செய்திகளை
விளக்கமாக கூறி நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சிறப்புகளை சிலாகித்து பேசி தனது வாழ்த்துகளுடன் உரையை சிறப்பாக ஆற்றி நிறைவு செய்தார். இன்றைய முப்பெரும் விழாவில் அண்மையில் ஒரிசாவில் பெரும் இழப்பை ஏற்படுத்திய பானிப்புயல் நிவாரண நிதியாக கூட்டத்தில் பங்குபெற்ற தோழர் தோழியர்கள் இடமிருந்து ரூபாய் 10000 ஆயிரம் சுமார் 10 நிமிடங்களிலேயே வசூலிக்கப்பட்டது பெரும் சாதனை. விரைவில் மாநில சங்கத்திற்கு இந்த தொகை அனுப்பி வைக்கப்படும். நிறைவாக தோழர் கே. சீனு பொருளாளர் நன்றி நவில முப்பெரும் விழா இனிதே நிறைவுற்றது. பிறகு தஞ்சை பாரம்பரிய சிறப்பு மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
வாழ்க ஏ
ஐ பி எஸ் என்
எல் ஓய்வூதியர் நல சங்கம்.
வளர்க ஏ
ஐ பி எஸ் என்
எல் ஓய்வூதியர் நல சங்கம்.
to view all events of Mupperum Vizha
with audio. Switch on your sound boxes.
No comments:
Post a Comment