Saturday 12 January 2019

Thanjavur District 
 January Month
 Meeting
AIBSNLPWA  தஞ்சை மாவட்ட  மாதாந்திர கூட்ட தொகுப்பு .
இன்று 12 1 2019 இரண்டாம் சனிக்கிழமை  காலை  10 மணிக்கு தொடங்கி நண்பகல் ஒன்று முப்பதுக்கு முடிவுற்றது ..கிட்டத்தட்ட 140 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு இன்றைய கூட்டத்தை சிறப்பு செய்தனர். அடுத்து தோழர் கே சந்தானகோபாலன் உபதலைவர் தனது உரையில் மாவட்ட மாநில அனைத்திந்திய சங்க செய்திகளை தொகுத்து வழங்கினார்.
 மாவட்ட செயலர் சாமிநாதன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர் நாடிமுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மாவட்ட செயலர் சாமிநாதன் pension revision எம் ஆர் எஸ் இரண்டிலும் நாம் அனுபவபூர்வமாக பெற்று வரும் சிக்கல்களையும் அதை நாம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார் அனைவரும் வருகிற ஏப்ரல் 1 லிருந்து வித்தவுட் வவுசரிலிருந்து வித் வவுசருக்கு ஆப்ஷன் கொடுத்தால் நலம் பயக்கும் என்றும் வருகிற 14 3 2019 அன்று நடைபெற இருக்கிற மகளிர் தின விழா ,மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பி எஸ் என் எல் குடும்ப நல விழா பற்றியும் சிறந்ததொரு உரையாற்றினார் .

பிறகு இந்த மாதம் பிறந்த வர்களின் பிறந்தநாள் விழா மற்றும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற தோழரின் மணிவிழா ஆகியன கொண்டாடப்பட்டது. தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் இனிதே நிறைவுற்றது. நன்றி ,வணக்கம். வாழ்த்துக்களுடன்,
 வி .சாமிநாதன் ,
மாவட்ட செயலர் ,
தஞ்சை.

No comments:

Post a Comment