Saturday 12 January 2019

AIBSNLPWA மதுரை மாவட்டத்தின் இரண்டாவது கிளை தேனி யில் 11-01-2019 வெள்ளிக்கிழமை காலை 10-00 மணிக்கு கோலாகலமானதொரு விழாவில் துவக்கப்பட்டது.
மதுரை மாவட்ட தலைவர்கள் , தமிழ்மாநில சங்க பொறுப்பாளர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு தேனி கிளை அமைப்பை வாழ்த்தி உரை நிகழ்த்திட , அயராது உழைத்து வெகு விரைவில் இரண்டாவது கிளையினை வெற்றிகரமாக துவக்கி , துடிப்புடன் பணியாற்றும் மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி மற்றும் மதுரை மாவட்ட சங்க முன்னணி வீரர்களை பாராட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 90 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட வெற்றிகரமான துவக்க விழாவில் ,
தேனி கிளை தலைவர்:- தோழர்  அண்ணாமலை , செயலர்:-  தோழர்  ஜான்சன் மாணிக்கராஜ், பொருளாளர்:-  தோழர்  விமன்
ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கிளை உறுப்பினர் எண்ணிக்கை உயர, உறுப்பினர்கள் அனைவரும் குறைவின்றி வாழ , விழாவில் பேசியவர்கள் வாழ்த்துக்கூறினர்.
மதிய உணவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியின் மற்ற  படங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
CLICK HERE

No comments:

Post a Comment