Friday 25 January 2019



09-01-2019 அன்று நடைபெற்ற தமிழ் மாநில சங்க மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்க செயலக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் மாநில செயலர் தோழர் ஆர். வெங்கடாசலம், சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் எஸ். தங்கராஜ் மற்றும் சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் தோழர் எம்.கண்ணப்பன் ஆகிய மூவரும் 23-01=2019 அன்று இரவு புறப்பட்டு திருத்துறைப்பூண்டி எனும் ஊருக்கு சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொறுக்கை என்ற கஜா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளஒரு குக்கிராமம் , தமிழ் மாநில உதவி பொருளாளர் தோழர் டி .முருகேசன் அவர்கள் தமது சொந்த காரில் திருவாரூரிலிருந்து மூவரையும்  புயல் பாதித்த திருவள்ளுவர் அருள் நெறி உதவி நடு நிலைப்பள்ளிக்கு   அழைத்துச்சென்றார். புயலின் கோர தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மிக கனத்த நெஞ்சுடன் பார்த்து பரிசீலித்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. எம். ராஜேந்திரன் அவர்கள் திருத்துறைப்பூண்டியில் இருந்து வழிகாட்டினார்.ஜாக்ட்டோ-ஜியோ போராட்டத்திற்கு  இடையில் நம்மை அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது .பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு வேதரத்தினம்  , சமூக ஆர்வலர் திரு ரகுராமன் , பள்ளி மாணவர் சங்கத்தலைவர்க திரு கார்ல் மார்க்ஸ் மற்றும்  கட்டிடத்தொழிலில் ஈடுபட்டுள்ள திரு பிரகாஷ் மற்றும் திருமுத்துசசெல்வன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
180 அடி நீளம் , 20 அடி அகலம் கொண்டிருந்த பள்ளிக்கட்டிடம் முற்றிலிலுமாக சேதமடைந்திருந்தது. இது தவிர பள்ளிக்கூடத்திற்கு முன்பாக இருந்த விழா மேடை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை ஆகியவை யாவும் சேதமடைந்திருந்தன. சுமார் 175 மாணவ மாணவியர் முதல் வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்புவரை கல்வி பயில்கின்றனர்.
நம்முடைய அமைப்பின் மூலமாக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் வரை நன்கொடை அளித்து சீரமைப்பு பணிகளை செய்ய முடியும் என்பதை தெரிவித்தோம்.

கட்டிட வேலைகளுக்கு தேவையான சாமான்களை வாங்குகின்ற கடைகளின் விபரம் , அவர்களின் வங்கி கணக்கு எண் ஆகியவைகளை தெரிவித்தால் நேரடியாக வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம் என்பதை தெரிவித்தோம்.உடல் உழைப்பு சம்பந்தப்பட்டவைகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ரகுராமன் அவர்கள் பொறுப்பில் பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளோம். சீரமைப்பு பணிகள் சுமார் 30--40 நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்.
சீரமைப்பு பணிகளுக்கு நம் அமைப்பு உதவுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற நம் கோரிக்கையை வெகுவாக வெளிப்படுத்தியது பள்ளியை சேர்ந்த அனைவரும்   மிகுந்த உற்சாகத்ததோடு வரவேற்றது அல்லாமல் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்துவதாகவும், ஊரில் உள்ள அனைவரையும் கூட்டத்தில் பங்கு பெற செய்து நம்மை  சிறப்பிப்பதாகவும் மிகவும் நெகிழ்ந்து போய் கூறினார்கள்.
பள்ளி சிறார்களுக்கு பிஸ்கட் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.பின்னர் சுமார் 12-30 மணிக்கு அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
வெளியில் வந்து பள்ளி கல்வெட்டை பார்த்த போது தவத்திரு பொன்னம்பல அடிகள் அவர்கள் இப்பள்ளிக்கு செயலாளராக உள்ளார் என்பதை கண்ணுற்றதும் நம் பரவசம் சற்று அதிகரித்தது.
     கஜா புயல் அடித்து ஓய்ந்த சில நாட்களிலேயே நாம் அந்த பகுதிக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினோம்.இன்று அதே பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பள்ளி சீரமைப்புக்கு நம் அமைப்பு படுபடப்போகிறது என்று நினைத்து பெருமிதத்தோடு அந்த கிராமத்திலிருந்து கிளம்பி ஊர் திரும்பினோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர்.வி ,
தமிழ் மாநில செயலர்




.


                                                        VIDEO  1
                                                       VIDEO 2













1 comment:

  1. பிஞ்சுக் குழந்தைகளின் மனக்குறை நெஞ்சை உலுக்குகிறது.நாம் புனரமைப்புக்காக உதவுகிறோம் என்பதில் பெருமிதம் அடைவோம்

    ReplyDelete