Monday 20 August 2018

FORMATION DAY CELEBRATION 
IN TNJ AND VLR 
DISTRICTS
இன்று 20 8 2018 திங்கட்கிழமை AIBSNLPWA  பத்தாவது அமைப்பு தின விழா  காலை 10 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் சுமார் அறுபது தோழர் தோழியர்கள் கலந்து கொள்ள விழா இனிதே ஆரம்பமாகியது. சங்க கொடியை தோழர் பிரான்சிஸ் சேவியர் ஏற்றிவைக்க தோழர்கள் அய்யனார் சந்தான கோபாலன் ஆகியோர் கோஷங்கள் முழங்க தலைவர் தோழர் கே தனபாலன் தலைமை ஏற்க தோழர் சாமிநாதன் வழிநடத்திட தோழர் தேவராஜ் கடவுள் வாழ்த்து இசைக்க விழா இனிதே தொடங்கியது
தோழர் கே சந்தானகோபாலன், உப தலைவர் தனது உரையில் நமது சங்கத்தின் மாண்புகளையும் மரபுகளையும் தோன்றிய விதத்தினையும் அதற்கு பாடுபட்ட தோழர்களையும் வாழ்த்தி நமது சங்கம் செய்துள்ள அளப்பரிய சாதனைகளையும் சங்கத்தின் சிறப்பு அம்சங்களையும் இன்னும் வருங்காலங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து பத்தாண்டுகள் மட்டுமல்ல இன்னும் நூற்றாண்டுகள் நமது சங்கம் சிறந்த பணியாற்றி ஓய்வூதியர்களுக்கு மட்டுமல்லாமல்  ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பணியாற்ற வேண்டிய கடமைகளையும் சங்கத்தின் சிறப்புக்களையும் வாழ்த்திப் பேசினார் .இதற்கு காரணமாக விளங்கிய சங்க தலைவர்கள் மற்றும் திறம்பட செயலாற்றிய அனைத்து தோழர்களையும் வாழ்த்தினார்.
தோழர் கைலாசம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு சிறப்பான கவிதைத் தொகுப்பினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்கள். முடிவாக தோழர் கே சீனு பொருளாளர் நன்றி கூறி விழாவினை இனிதாக நிறைவு செய்தார்கள்.
Today  Vellore SSA AIBSNLPWA celebrated Federation day. com M.Thangaraj presided over the meeting . More than 75 members including 5 lady comrades attended. Coms N.Sukumar District Treasurer and C.Murugan , District Secretary spoke on the occasion and requested all members to donate liberally for  FLOOD RELIEF FUND of Kerala. Members have donated Rs 16,000/-. Com V S Muthukumaran Circle Organising Secretary delivered a  best speech.  Com M Purushothaman  delivered Vote of Thanks . Delicious Vadai and Tea were served at the end of the meeting to all.

No comments:

Post a Comment