Saturday, 25 August 2018

இன்று 25 8 2018 காலை  PGM Telecom BSNL  அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை பதினொரு மணி அளவில் ஆரம்பித்தது. நிர்வாக தரப்பில் PGM Telecom DGM Admin ,AGM admin, CAO Finance ஆகியோரும் AIBSNLPWA ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பாக தோழர்கள் V. சாமிநாதன், K.சந்தான கோபாலன், M.இருதயராஜ், பிரான்சிஸ் சேவியர், முறையே மாவட்ட செயலர் உப தலைவர்கள் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
10 குறைகள் விவாதிக்கப்பட்டு 2 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டதன. மீதமுள்ள எட்டு குறைகள் தீர்க்கப்படவேண்டிய நிலையில் உள்ளன இது சம்பந்தமாக CCA மற்றும் DOT செல்லுக்கு சென்று தீர்வு காணப்பட வேண்டும். விவாதிக்க கொடுக்கப்பட்ட குறைகள் மற்றும் அதன் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது. தோழர்கள் படித்து அறிந்து கொள்ளலாம். கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது. நமது சங்கத்தின் சார்பாக நமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் PGM BSNL தஞ்சாவூர் அவர்களுக்கு மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
இவன் தோழமை உணர்வுகளுடன்,
 கே .சந்தான கோபாலன,
உப தலைவர், AIBSNL  ஓய்வூதியர்கள் நல சங்கம், தஞ்சை.


No comments:

Post a Comment