காரைக்குடி SSA-ன் மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 23-05-2018 அன்று காரைக்குடி பூமாலை வணிக வளாகத்தில் சிவகங்கை ஜெயராமன் அவர்கள் தலைமையில் காலை 1030 மணியளவில் துவங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் மறைந்த தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்டச்செயலர் முருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 3வது மற்றும் 4வது தவணை மருத்துவப்படி பட்டுவாடாவில் கடைசிநேர AIBDPAவின் "இணையதள" செய்தியால் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட வீண் குழப்பங்களை போக்கியது பற்றியும் அதன் பின் நடந்த பட்டுவாடா பற்றியும் சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைத்தார்.
மாவட்டமாநாடு நடத்துவது பற்றியும் மாநிலமாநாடு மற்றும் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் சார்பாளர்கள் பற்றியும் கிளைச்செயலர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
காரைக்குடி கிளைச்செயலர் சுந்தரராஜன் இராமநாதபுரம் கிசெ இராமமூர்த்தி சிவகங்கை கிசெ சந்திரன் மற்றும் பரமக்குடி சார்பாக கணேசன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட மாநாட்டை அக்டோபர் மாதம் பரமக்குடியில் நடத்துவது எனமுடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய மாநாட்டு நன்கொடை ஏற்கெனவே அனுப்பியதுபோக மீதம் வசூலித்ததொகையை உடனே அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டது.
அகிலஇந்தியமாநாட்டில் கலந்துகொள்ளும் சார்பாளர்கள் பற்றி பரமக்குடி கிளை இன்னும் இரண்டொரு தினங்களில் தெரிவிப்பதாகக் கூறப்பட்டதால் சார்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.
மருத்துவப்படி பெற்றதன் நிமித்தம் சிவகங்கை சந்திரன் மாவட்டசங்கத்திற்கு ₹500/- நன்கொடை அளித்தார்.
சமீபத்தில் நடந்த அதாலத் பற்றியும் அதாலத்தில் நாம் வைத்த பிரச்னைகள் பற்றியும் அதாலத்தில் நமது பிரச்னை எதுவும் விவாதிக்கப்படாதது பற்றியும் பென்சன் பட்டறை நடந்தது பற்றியும் மாநில துணைச்செயலர் நாகேஷ்வரன் விரிவாகப்பேசினார்.
3வது மற்றும் 4வது தவணை மருத்துவப்படி பட்டுவாடா உத்தரவை வெளியிட நமது சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றியும் AIBDPA தவறாக வெளியிட்ட. இணையதள அறிவிப்பு பற்றியும் எதிர்கால ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியமாற்றம் பற்றியும் அதற்காக நமது சங்கம் எடுத்துவரும் முயற்சிபற்றியும் அகில இந்திய துணைப்பொதுச் செயலர் தோழர்.அருணா அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
மாவட்டப்பொருளாளர் பூபதி நன்றி கூற மாவட்டச்செயற்குழு முடிவுபெற்றது.
மாவட்டச்செயற்குழு முடிந்தவுடன் பொதுமேலாளர் அலுவலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக்கண்டித்து அனைத்து சங்கம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அருணா அவர்களும் நமது மாவட்ட சங்கநிர்வாகிகளும் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment