29 5 2018 செவ்வாய்க்கிழமை
தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தஞ்சை மத்திய தந்தி நிலைய வளாகத்தில் காலை பத்து
முப்பதுக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது . சுமார் 33 தோழர்கள் , இரண்டு தோழியர்கள் உட்பட கலந்து கொண்ட கூட்டத்தை
தோழர் ஏ கே தனபாலன்
மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர் வி சாமிநாதன் மாவட்டச்
செயலர் முன்னின்று நடத்த தொடங்கினார் .
முதல்
நிகழ்வாக அண்மையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக உயிர் நீத்த தோழர் தோழியருக்கு
வீர வணக்கங்களை செலுத்தி அவர்தம் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
பிறகு
தோழர் கே அய்யனார் இணைச்செயலர்
வரவேற்புரை நிகழ்த்த மாவட்டச் செயலர் இன்றைய அவசர செயற்குழு கூட்டத்தின் அவசியத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள் . பிறகு
சென்ற நிதி
ஆண்டின் வரவு செலவு கணக்கினை தோழர் கே சீனு பொருளாளர் சமர்பித்து சில விளக்கங்களுக்கு பிறகு ஒருமனதாக சபையோரின் ஆள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இன்றைய
நிகழ்ச்சியில் முக்கியமாக அகில இந்திய மாநாடு, மாநில மாநாடு & மாவட்ட மாநாடு பற்றிய விவாதங்கள் முறையே தோழர்கள் பாலசுப்பிரமணியம், சேவியர்,
என்
நடராஜன் , சிவசிதம்பரம், மதுரை, ராஜேந்திரன், மல்லிகா
. சுகுமாரன், சந்தான
கோபாலன், அய்யனார்
கலியபெருமாள், இளஞ்செழியன்
, அர்ஜுனன் & புருஷோத்தமன்
ஆகியோர் தங்களது கருத்துக்களை விரிவாக விளக்கி பேசினார்கள். பிறகு
மாவட்டச் செயலர் அனைவரது கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு கீழ்கண்ட தீர்மானங்களை சபையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள்.
தீர்மானங்கள்
1
அகில
இந்திய மாநாட்டிற்கு 14 சார்பாளர்கள்
தேர்வு செய்யப்பட்டு அவர்களது சார்பாளர்கள் கட்டணத்தை மாவட்ட சங்கமே ஏற்றுக் கொள்வது என்றும் ,
2.
திருச்சியில் நடக்க இருக்கிற மாநில மாநாட்டிற்கு 35 சார்பாளர்கள்
தேர்வு செய்யப்பட்டு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான
சார்பாளர் கட்டணத்தை மாவட்ட சங்கம் ஏற்றுக் கொள்வது என்றும்
3
மாவட்ட மாநாடு வருகிற டிசம்பர் மாதம் ஓய்வூதியர்கள் தினத்தோடு நடத்திடவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாடு மற்றும் மாநில மாநாடு இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் வாழ்த்து வழங்கும் விழா ஆகவும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது தவிர, மாவட்ட
மாநாட்டிற்காக ரூபாய் 200/- மட்டும்
ஒவ்வொரு உறுப்பினர் இடமிருந்தும் வசூலிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
4. தோழர்
வி சாமிநாதன் மாவட்ட செயலரின் 50 ஆண்டுகால சங்க சேவையினை பாராட்டி விழா எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய
கூட்டத்தில் காலையில் வடையும் தேனீரும் வழங்கப்பட்டது. மதியம்
வழக்கம் போல் தஞ்சாவூர் சுவைமிக்க மதிய விருந்து வழங்கப்பட்டது. இன்றைய
கூட்டம் மிக சிறந்த முறையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பங்குபெற்ற
அனைத்து தோழர் தோழியர்க்கு நன்றி கூறி விழா இனிதாக முடிவுற்றது.
அகில
இந்திய பாரத் சஞ்சார் நிகம் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் நீடுழி வாழ்க
இப்படிக்கு
தோழமை உணர்வுடன்
கே
சந்தானகோபாலன்,
மாவட்ட
துணை தலைவர்,
அகில
இந்திய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் தஞ்சை மாவட்ட கிளை.
No comments:
Post a Comment