தர்மபுரி மாவட்ட 7வது மாநாடு 07.01.2025 அன்று தலைவர் தோழர் முனியன் தலைமையில், தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் 1030 மணிக்கு , கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. தோழர் சுப்ரமணியம் DS தர்மபுரி வரவேற்புரை ஆற்றினார். தோழமை சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். திருமதி சுபா GM BSNL சிறப்பு விருந்தினர். சேலம் கிழக்கு மாவட்ட, சேலம் மேற்கு மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள் தோழர்கள் ரமணி, பட்டாபிராமன், வேதியப்பன், அ. இ. அமைப்பு செயலர் தோழர் வேணுகோபால் மற்றும் , மாநில செயலர் கலந்து கொண்டு வாழ்த்துரை, சிறப்புரை ஆற்றினர். மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்கள். முனியன் தலைவர்.
சுப்ரமணியம் செயலர்,
வணங்கமுடி பொருளாளர்
ஆக தேர்வுசெய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் வாழ்த்துகள். 150 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment