Sunday, 25 February 2024
Saturday, 24 February 2024
Thursday, 22 February 2024
Sunday, 18 February 2024
Sunday, 11 February 2024
PENSION REVISION ISSUES AS ON
09-02-2024.
President,
Vice President Com Gangadhara Rao and self reached Delhi on 5/2/24.
Com
N K Gandigwad, veteran leader of Hubbali along with his friend also reached
Delhi on the same day. We met Shri Pralhad Joshi ji on 6th night at his
residence and requested him to arrange a meeting with Hon MoC. He told that he
will talk to him and meeting will be arranged on 7th or 8th and told his PA to
coordinate with MoC PA and us.
Hon
MoC was terribly busy and couldn't get appointment even on 9th.
But
today (9th) we could meet Telecom secretary (even though he is on leave today
he came to office in the evening to sign some files and by the efforts of our
other source we could meet him). We also met Member F , Member S and Director
(Estt.)
After
meeting all these officers our assessment is :
1)
DoT mentally prepared to implement the judgement of PB, CAT without preferring
an appeal
2)
Informal consultations were held with DoP&PW and DoE.
3)
The file is not yet sent to DoE and it may be sent in the coming week
4)
All the officers are tight-lipped about the actual proposal but we could
understand that they have two/three options for implementing the CAT judgement.
5)
It's clear that DoT is interested to find a permanent solution and at par with
CG pensioners as we demanded.
6)
It's clear that after getting the nod from nodal departments cabinet note will be
prepared and the whole process will take atleast 6 months because a policy
decision has to be taken to delink pension revision from pay revision and
related issues.
7)
We called the leaders of applicant associations today evening to brief them but
only Com Bagchi and Jain from AIRBSNLEWA came and others could not come due to
personal reasons.
8)
We told them that we are not interested to file any contempt petition because
that would provide an opportunity for DoT to file an appeal against the
judgement which may drag on for nearly 4 years. We also appealed to other
applicant associations not to go for contempt petition.
Despite
severe cold for which we are not accustomed to and many health issues we stayed
in Delhi for 5 days. Hope all of you would appreciate our sincere efforts for
getting a permanent solution.
10-02-2024 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட AIBSNLPWA மாதாந்திர பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் ஆரம்பமாகியது. இன்றைய கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநிலத் தலைவர் தோழர் வி சாமிநாதன் முன்னிலை வகிக்க தோழியர் சந்திரகுமாரி மாவட்ட தலைவர் தலைமையில் தோழர் க. அய்யனார் மாவட்ட செயலர் கூட்டத்தினை நடத்த கடந்த இரண்டு மாதங்களில் உயிர்நீத்த தோழர்களுக்கு நினைவஞ்சலி, மறைந்த மாவட்ட பொருளாளர் தோழர் கே சீனு மூத்த தோழர் கள் அமீர்ஜான் என் ஆர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சேர்ந்த நான்கு தோழர்கள் ஆகியோருக்கு மௌன அஞ்சலி உடன் அவர்களது சிறப்பு சேவைகளை பற்றியும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது .
மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்த, இந்த மாதம் மணிவிழா அமையப்பெற்ற தோழர்கள் பிறந்தநாள் அமையப்பெற்ற தோழர் தோழியருக்கு விமர்சையாக கொண்டாடப்பட்டது தமிழ் மாநில தலைவர் தோழர் சாமிநாதன் , மாவட்ட முதன்மை ஆலோசகர், செயல் தலைவர், இணைச் செயலர், துணைச் செயலர் மற்றும் கிளை சங்க செயலர்கள் மற்றும் சில பல மூத்த தோழர்கள் தோழியர்கள் கூட்டத்தில் பேசி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அனைவரும் நமது ஓய்வூதிய மாற்றம் சென்னை சொசைட்டி பிரச்சனை பற்றிய தங்களது தெளிவான கருத்துக்களை பதிவு செய்தனர்.
மாவட்ட பொருளாளர் இயற்கை எய்திய நிலையில் புதிய மாவட்ட பொருளாளராக தோழர் F. ஆரோக்கியதாஸ் முன்னாள் மாநில துணைப் பொருளாளர் ஒருமனதாக அங்கத்தினர்கள் அனைவரது ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். தோழியர் கோதாவரி தோழர் ஜெயராமன் ஆகியோர் துணை பொருளாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்து மாவட்ட செயற்குழு கூட்டம் சுமார் 40 தோழர் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது தமிழ் மாநில NFTE செயலர் தோழர் நடராஜன் அவர்கள் நமது செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறந்ததொரு வாழ்த்துரை வழங்கினார். அடுத்து வந்திருந்த அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளைச்சங்க நிர்வாகிகளும் மாநில தலைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். முடிவாக கீழ்கண்ட முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்.
1. நிதிநிலை அறிக்கையினை இந்த வருட மார்ச் 31 க்கும் புதிய மாவட்ட பொருளாளர் மற்ற இதுவரை நிதிநிலை நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த தோழர்களுடன் ஒன்றுபட்டு இந்த கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும், ஏனென்றால் எதிர்பாராத விதமாக நமது முன்னால் மாவட்ட பொருளாளர் திரு கே. சீனு அவர்களின் அகால மரணத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2. இதுவரை வருடாந்திர நன்கொடை மாவட்ட சங்கத்திற்கு உடனடியாக வழங்கிடவும் இன்று முதற்கொண்டு வாழ்நாள் சான்றிதழ் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் இலவசமாக எடுத்துக் கொடுக்கவும் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
3. நமது மாவட்ட சங்க வாட்ஸ் அப் குரூப்பில் மாவட்ட தலைவர் மற்றும் கிளைச் செயலாளர்கள் அனைவரையும் குரூப் அட்மின் ஆக இணைத்திடவும் முடிவு செய்யப்பட்டது. அதே அதேநேரத்தில் சங்க செய்திகளை தவிர வேறெந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் பதிவிடப்பட்டால் மாவட்ட சங்க தலைவர் நீக்கிவிட ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. சென்ற இரண்டு வருடங்களாக அகவை 70,75,80 கடந்த தோழர் தோழியர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 2024ல் அல்லது அதற்கு பிறகு ஓரிரு மாதங்களில் சிறப்புற நிகழ்வுகளை நடத்திட ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. வருகின்ற மார்ச் 2024 இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர கூட்டத்துடன் உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி மகளிர் குழு அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற தீர்மானிக்கப்பட்டது.
6. அடுத்து மிக முக்கிய தீர்மானமாக அனைத்து விடுபட்ட தோழர் தோழியர்கள் தங்களது ஆண்டு நன்கொடை ரூபாய் 600 செலுத்தி எல்லா சலுகைகளும் பெற்று சிறந்ததொரு உறுப்பினராக சங்க செயல்பாட்டினில் தாங்களை ஈடுபடுத்தி கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொண்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்னும் சில விடுபட்ட தீர்மானங்கள் இருப்பின் பிறகு பதிவிடப்படும்.
தோழமை வாழ்த்துக்கள் உடன்,
கே சந்தான கோபாலன்.