Sunday, 19 February 2023


 GS writes to Director ( Finance ) BSNL regarding payment of Medical Bills to retired Employees 

















Tuesday, 14 February 2023

                    காணொளி சந்திப்பு
 
13/02/2023 அன்று AIBSNLPWA. தமிழ்நாடு மாநிலச்சங்கத்தின் சார்பாக காணொளி சந்திப்பு நடைபெற்றது.
 
 மாநிலத்தலைவர் தோழர் சுவாமிநாதன் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலச்செயலர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
 
அகில இந்தியத்தலைவர் தோழர். D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு PR.CCA பொறுப்பு அதிகாரி...திருமதி வந்தனா குப்தா அவர்களுடன் 10/02/2023 அன்று நடைபெற்ற சந்திப்பு குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.
திருமதி வந்தனா அவர்களின் அணுகுமுறை மனிதநேயம் மிக்கதாக இருந்ததாக குறிப்பிட்டார்.
 
விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள்
1. TT தோழர்கள் LM பதவியில் பெற்ற  ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் டெல்லி DOT தலைமை அலுவலகத்திற்கு விளக்கம் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
2. EXTRA INCREMENT கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. நமக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னும் பிரச்சினை தீர்க்கப்படாதது குறித்து நமது ஆழ்ந்த வருத்தம் பதிவு செய்யப்பட்டது. DOT இப்பிரச்சினையில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் நிச்சயமாக இப்பிரச்சினையை ஓய்வூதியர்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
3. EPP என்னும் அதிகாரிகளின் பதவி உயர்வுத் திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்காத அதிகாரிகளின் தற்காலிகப் பதவிக் காலத்தில் OFFICIATING PERIOD வழங்கப்பட்ட உயர்வுத்தொகையை ஓய்வூதியத்திற்கு அனுமதிப்பது பற்றி விரைந்து முடிவெடுக்கப்படும்.
 
4. மதுரையில் நடைபெறவுள்ள அதாலத்குறைதீர்ப்பு மன்றக்கூட்டத்தில்..
ஆண்டு உயர்வுத்தொகை பிரச்சினை மற்றும் EXTRA INCREMENT பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு நமது பிரச்சினையை எடுத்துச்சொல்வது.
 
மாவட்டச்சங்கத்தின் சார்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள்
v 2018-2019 விடுபட்ட BSNL மருத்துவப்படி,
v FMA– மாதந்திர மருத்துவப்படி,
 
v BSNL மருத்துவத்திட்டத்தில் இருந்து விலகி CGHS திட்டத்தில் சேரும் வரை உள்ள காலத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான தீர்வு. பரமக்குடி தோழர் சங்கரன் பிரச்சினை
 
v SUPPLEMENTARY BILL
வாழ்வு சான்றிதழ் கொடுக்க தாமதம் ஆன தோழர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள கடும் காலதாமதம்.
 
v சென்னை சொசைட்டி பிரச்சினை
SAMPANN மாற்றம் செய்யப்பட்ட பல தோழர்களுக்கு அவர்களது அலைபேசி எண் சரியாக பதிவு செய்யப்படாத பிரச்சினை.
 
v மாநில சங்க WhatsApp புலனத்தில் மாவட்டச் செயலர்கள் பதிவிடுவதற்கு அனுமதிப்பது.
 
தோழர்களே
இன்றைய காணொளி, உற்சாகமாக... நடைபெற்றது. 
 மாநில சங்கத்திற்கு வாழ்த்துகள்... 












Monday, 13 February 2023

 

உற்சாகம் கரை புரண்டோடிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

அன்புடையீர்

வணக்கம். அண்ணாச்சி P.Jayaraman  அவர்கள் AGS ஆக தேர்ந்தெடுக்கப் பட்டதையொட்டி நமது உறுப்பினர்கள் உவந்தளித்த நன்கொடையில் மீதம் உள்ள தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்ற முடிவின்படி நாம் முதல் கட்டமாக கடலூர் குழந்தைகள் காப்பகத்தில்

Ø 🙏125 குழந்தைகளுக்கு கோரைப்பாய் மற்றும் போர்வைகள் வழங்கினோம்.

Ø 🙏இரண்டாம் கட்டமாக பாலூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு உதவும் வகையில் மின்சாரம் தடைப்பட்ட பொழுதும் கணினிகள் தொடர்ந்து இயங்கும் வகையில் இன்வெர்ட்டர் வழங்க வேண்டும் என நமக்கு வந்த கோரிக்கையை பரிசீலித்தோம். பாலூர் கிராமப்புறப் பகுதியில் இருக்கிறது. மேலும் அங்கு அடிக்கடி மின்தடை  ஏற்படுகிறது. இதனால் கணினி இயக்கம் திடீரென தடைபட்டு அடிக்கடி கணினிகள் பழுதாகின்றன. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்தப் பள்ளியின் அலுவலக உதவியாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ₹ 23,500  மதிப்புள்ள இன்வெர்ட்டரை அந்த பள்ளிக்கு வழங்கினோம். அதை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 09-02-2023 அன்று காலை 11 மணிக்கு அந்தப் பள்ளியில் நடந்தது. கலந்து கொண்ட தோழர்கள்:

1.P.ஜெயராமன் 2.P.சாந்தகுமார்,3.K.இளங்கோவன்,

4.N.திருஞானம், 5.V.விஜயலட்சுமி, 6.R.அசோகன்,

7.N.அன்பழகன், 8.B.கந்தசாமி

 

நிகழ்வினை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. அன்னபூரணி எம் எம் பில் பிஎட் அவர்களும் ஆசிரியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மாணவ மாணவிகளும் நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கி நமக்கு புத்தகங்கள் பரிசு வழங்கினார். மாவட்டத் தலைவரும் செயலரும் கதராடை போர்த்தி கௌரவிக்கப் பட்டனர். பலத்த கரவொலிக்கிடையே நாம் இன்வெர்ட்டரை பள்ளிக்கு வழங்கினோம். தலைமை ஆசிரியையின் வேண்டுகோளுக்கிணங்க தோழர்கள் P.ஜெயராமன், P.சாந்தகுமார், K.இளங்கோவன், R.அசோகன், V.விஜயலட்சுமி, N.அன்பழகன் ஆகியோர் மாணவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் உரையாற்றினர். அவர்களின் உரை ஒரு கலந்துரையாடல் போல அமைந்தது.

v 👍பிடித்த hero யார் என்ற கேள்விக்கு எனது தந்தை என பதிலளித்த மாணவருக்கும்,

v 👍திருக்குறள் ஒப்புவித்த மாணவிக்கும்,

v 👌JEE தேர்வில் வெற்றி மாணவருக்கும்,

v 👌சிறந்த ரேங்க் வாங்கிய மாணவ மாணவிக்கும் நமது தோழர்கள் அவர்களே எதிர்பாராத வண்ணம் ரொக்கப் பரிசளித்து பாராட்டினர். மேலும்

v 👌NEET தேர்வுக்கு தயாராகும் 2 பேருக்கு தோழர்.P.சாந்தகுமார் அவர்கள் தலா ₹ 1,100 மதிப்புள்ள இரண்டு செட் பயிற்சி புத்தகங்கள் வழங்க உறுதியளித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது. துவக்கத்திலிருந்து நிறைவுபெறும் வரை சம்பிரதாயமாக அல்லாமல் உற்சாகமாக அமைந்த நிகழ்வு மாணவர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்தது. தலைமை ஆசிரியை, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது நன்றி

v 👍தூரத்தை கணக்கில் கொண்டு தாமாக முன்வந்து நமக்கு வாகன வசதியளித்த தோழர்கள்.R.அசோகன், K.இளங்கோவன் ஆகியோரின் பெருந்தன்மைக்கு நமது நன்றி. விழா சிறப்புற அனைத்து வகையிலும் வழிகாட்டிய தோழர். P.ஜெயராமன், P.சாந்தகுமார், N.திருஞானம் உள்ளிட்ட மூத்த தோழர்களுக்கும் நமது நெஞ்சுநிறை நன்றி.

இவண்,
AIBSNLPWA  கடலூர் மாவட்ட சங்கம் மற்றும் 
கடலூர் பகுதி.