நமது மாவட்ட சங்கம் சார்பாக 28.12.22 அன்று திருச்சியில் "ஓய்வூதியர்கள் தினம் சிறப்பு கூட்டம்" ஹோட்டல் அருண் சுமங்கலி மஹாலில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. 270 ஓய்வூதியர்கள், 30 மகளிர் உட்பட கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மாவட்ட தலைவர் தோழர் M. சித்திராஜ் தலைமை ஏற்றார். தோழர் R.சுப்பிரமணியன், DFA (ஓய்வு), தோழர் S.குமரேசன் DGM.A (ஓய்வு), மாவட்ட துணை தலைவர் தோழர் M.சொக்கலிங்கம் CAO (ஓய்வு), தோழர் P.பாலுசாமி கரூர் கிளை செயலர், தோழர் Y.மில்டன் புதுக்கோட்டை கிளை செயலர், தோழர் M.மாரிமுத்து அரியலூர் கிளை செயலர், தோழர் மணி DGM.F ( ஓய்வு), தோழர் V.ஜெய கணேசன் மாநில சிறப்பு அழைப்பாளர் SDE (ஓய்வு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் P. அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். தோழர் M.கமலநாதன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். கடந்த ஜுன் மாதம் நடை பெற்ற மாவட்ட மாநாட்டிற்கு பிறகு, மறைந்த நம் உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த சிறப்பு கூட்டத்திற்கு திருச்சி SSA பொது மேலாளர் திரு S.பாலசந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். BSNL வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.அதற்கான பணியில் திருச்சி மாவட்ட நிர்வாகமும் தனது பணியை செய்து கொண்டு இருக்கிறது.ஓய்வூதியர்கள் எல்லோரும் தங்களுடைய உடல்நலத்தை நன்கு கவனித்து கொள்ளுங்கள் என்றும் கேட்டு கொண்டார். BSNL வளர்ச்சிக்கு ஓய்வூதியர்கள் தங்களால் இயன்ற பங்களிக்க வேண்டும் என்றும் வேண்டுககோள் விடுத்தார்.
அதன்பிறகு மாநில உதவி செயலர் தோழர் N. வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
அடுத்தபடியாக மாநில செயலர் தோழர் S.சுந்தர கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.நமது மத்திய சங்க தலைவர்கள், முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களை இரண்டு முறை சந்தித்தனர். அதன் பிறகு தற்பொழுது மந்திரியாக இருக்கும் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை 3 முறை சந்தித்து நமது கோரிக்கையான 7th CPC formulaவை அமல் செய்து பென்ஷன் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த அக்டோபர் 17ம் தேதி DoT Member (S)
நடத்திய கூட்டத்திலும் நமது கோரிக்கையின் நியாயத்தை வலுப்படுத்தம் வகையில் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.7வது CPC formula
ஒன்று தான் பென்ஷன் ரிவிஷன் நிரந்தர தீர்வு. அதை வென்றெடுக்க மத்திய சங்கம் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அதன் பின்னர் தோழர் V. ஜெய கணேசன் திருச்சி மாவட்டத்தில் உள்ள BSNLMRS பிரச்சனைகளை விவரித்து அதை மாநில சங்கம் தீர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொணாடார்.
மதியம் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
மாவட்ட பொருளாளர் தோழர் G. பிரான்ஸிஸ் அன்டாயின் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
29-12-2022
, தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் காலை சுமார் 11-00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர் முனியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் மாநில துணைத் தலைவர் தோழர் வேடியப்பன் துவக்க உரையாற்றினார். AIBSNLEA மாவட்டச்செயலாளர் தோழர் ராமசுந்தரம், AIBSNLPWA சேலம் கிழக்கு மாவட்டச்செயலாளர் தோழர் T S ரகுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில உதவி செயலாளர் தோழர் பட்டாபிராமன் தனது சிறப்புரையில் ஓய்வூதியர் தின சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர் P. வேணூகோபால் தனது சிறப்புரையில் ஓய்வூதிய மாற்றம், CGHS குறித்து விரிவாகப் பேசினார் மாநில துணைத்தலைவர் தோழர் R V தனது சிறப்புரையில் ஓய்வூதிய மாற்றத்துக்காக நமது அகில இந்திய சங்கத்தின் முயற்சிகளையும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு குறித்தும், முறன்பட்ட போக்கு குறித்தும் நமது போராட்டங்கள் மூலம் நிச்சயம் நமது கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்றார்.
மாவட்டப்பொரு ளாளர் தோழர் வணங்காமுடி நன்றி கூற கூட்டம் சுமார்
2-30 மணியளவில் நிறைவுற்றது.
100 தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது