Tuesday, 28 June 2022

 List of the Pensioners / Family Pensioners whose LC / DLC expiring on 30-06-2022  (status as on 27-06-2022)

CCA  Tamilnadu circle has released the names of pensioners whose Life Certificates are getting expired on 30-06-2022. The list contains 10 pages.

A link is given below to see the list.

CLICK THIS LINK WITH YOUR MOUSE POINTER TO SEE THE LIST

Monday, 27 June 2022

 

Tenkasi Branch  General Body Meeting.

AIBSNLPWA தென்காசி கிளையின்5 -வதுஆண்டுவிழா

25 -6 -22  அன்று  தென்காசி- மேலகரம்  திரிகூட ராசப்ப கவிராயர்திருமண மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது. சங்க துணைத்தலைவர் தோழர் A .அஹமத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .70-கும்மேற்பட்ட தோழர் தோழியர்கள் திரளாக கலந்துகொண்டார்கள் .கடவுள் வாழ்த்து  தோழர் துரைராஜ் அவர்கள் பாடினார் . தலைவர் முன்னுரைக்குப்பின் கடந்த இரண்டரை வருடங்களில் இறந்த நம் தோழர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறற்றப்பட்டது. இரண்டு நிமிட  மௌன அஞ்சலிக்குப்பிறகு  நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

கிளை செயலாளர்  S .செல்லப்பா வரவேற்புரை நிகழ்த்தி, தென்காசி கிளையின் செயற்பாடுகள் கடந்த கொரோனா காலத்தில் எவ்வாறு நடைப்பெற்றது என்பதையும்,நமது மாநில சங்கம் ,மத்திய சங்கம் எவ்வாறு செயல்பட்டு நமது ஓய்வூதியர்கள் நலன்களுக்காக செயல்பட்டு வெற்றிகரமான செயல்களை செய்தார்கள் என்பதை யும் விளக்கி கூறினார். மேலும் தென்காசி கிளையின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதையும் விளக்கி கூறினார் .சங்க பொருளாளர்  N.வேலாயுதம் அவர்கள் 2019  ஆண்டு முதல் 31 -03 -2022  முடிய,  சங்க வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார் . அனைத்து உறுப்பினர் தோழர்களும் கை தட்டி  ஒப்புதல் கொடுத்தார்கள். பின்னர் செயலாளர்.S. செல்லப்பா அவர்கள் புதிய /பழைய  தீர்மானங்களை  முன் மொழிந்தார். அவைகள் அனைத்தும்  ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது .மேலும் இந்த விழாவில் சங்க மூத்த தோழர் /அதிகாரி  V .கணபதி சுப்ரமணியன்  அவர்கள்  80  வயது நிறைவடைந்ததை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் . அவரது கடந்தகால நிர்வாக திறமைகளையும் சேவைகளையும்  தோழர்கள் செல்லப்பா, வேலாயுதம் ,கணேசன்,கிட்டு  ஆகியோர் பாராட்டி பேசினார்கள். கணபதி சுப்ரமணியன் அவர்கள் ஏற்புரை வழங்கினார் . சிறப்பு விருந்தை நமதுV. கணபதி சுப்ரமணியன்  அவர்கள்   ஏற்பாடுகள் செய்திருந்தார் . புதிய நிர்வாகிகள் தேர்வு தோழர் V.கணேசன் அவர்கள் நடத்தினார். கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் .

1..தலைவர்--------A .அஹ்மத் அலி

2 .செயலாளர்-----S .செல்லப்பா

3 .பொருளாளர்---R .சங்கர்

நன்றி உரைக்குப்பின் தேசியகீதம் பாடப்பட்டு கூட்டம் இனிதே முடிந்தது.






Sunday, 26 June 2022

 

தோழர்களே! தோழியர்களே!

25/06/2022 அன்று கள்ளக்குறிச்சி பகுதியின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் அவர்கள் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக 80 வயது அகவை எட்டிய மூத்த தோழர்கள் திரு பாலசுப்பிரமணியன் Retired AGM, திரு யாகூப் சேட் Retired LI ஆகியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தோழர் அர்ஜுனன் அவர்கள் இருவருக்கும் கிரீடம் சூட்ட,  நமது மாநிலச் செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்கள் V அர்ஜுனன், S பொன்மலை, K சுப்பிரமணியன் ஆகியோர்கள் முறையேபகுதித் தலைவர், பகுதி ஒருங்கிணைப்பாளர், பகுதி பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

மாநில சங்க துணைத்தலைவர் தோழர் சந்திரமோகன் அவர்கள் CGHS பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் தோழர் R வெங்கடாச்சலம் அவர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வு ஊதிய மாற்றம் பெறுவதற்கான நமது சங்கத்தின் முயற்சிகள், மத்திய சங்க செயல்பாடுகள் மற்றும் VRS-2019 விருப்ப ஓய்வு திட்டத்தின்படி  ஓய்வு பெற்றவர்களில்  TT, JE பதவிகளில் இருந்த சில தோழர்களுக்கு ஓய்வு ஊதியம் CCATN அலுவலகத்தால் குறைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நமது மத்திய சங்கம் ஆற்றிவரும் பணிகளை பட்டியலிட்டார். விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் தனி ஒரு மனிதனாக நின்று கள்ளக்குறிச்சி பகுதி ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளும் தலையிட்டு அவர்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெற்றுத்தந்த தோழர் மணி அவர்களின் பணி என்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவரது சீரிய பணிக்காக தோழர் மணி அவர்களை பாராட்டுவதில் மாவட்ட சங்கம் பெருமை கொள்கிறது. அதேபோல் NFPTE-BSNL கள்ளக்குறிச்சி பொறுப்பாளர் தோழர் சைதன்யாJE அவர்கள் ஓய்வூதியர்கள்பால் காட்டும் பேரன்பை மாவட்ட சங்கம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.VRS-2019 விருப்ப ஓய்வு திட்டத்தின் போது கள்ளக்குறிச்சி தோழர்களின் பென்ஷன் பேப்பர்களை தயார் செய்வதிலும் உயிர்வாழ் சான்றிதழ் எடுத்துக் கொடுப்பதிலும் அளப்பரிய சேவையை அவர் ஆற்றியுள்ளார். அவருக்கு மாவட்ட சங்கம் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொன்மலை அவர்கள் நன்றி கூறினார்.