Tuesday, 29 March 2022

 

இன்றைய AIBSNLPWA  ஓய்வூதியர்கள் நல சங்கத்தின்  தஞ்சை மாவட்ட உலக மகளிர் தினம் மற்றும் மாதாந்தர பொதுக்கூட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.

காலை 10.00 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் தொடங்கப் பெற்று பிற்பகல் 2 மணி அளவில் நிறைவுற்றது.  விழாவினை தலைவர் எம் ராஜேந்திரன் தலைமை ஏற்க தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் தோழர் டி முருகேசன் மாநில உதவி பொருளாளர் தோழரே கே தனபாலன் கௌரவ தலைவர் தோழர் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி மூத்த தொழிற்சங்க தலைவர் அவர்கள் முன்னிலை வகிக்க தமிழ் தாய் வாழ்த்து பாடிட நிகழ்வுகள் இனிதே தொடங்கியது.

அடுத்து எம் கணேசன் மாவட்ட பொறுப்பு செயலர் வரவேற்புரை நிகழ்த்த தோழர் அய்யனார் இணைச் செயலர் நிகழ்வுகளை தொகுப்பாளராக பணியாற்றி சிறப்பித்தார். மாதாந்தர கூட்டத்தில் தோழர் சந்தான கோபாலன் தோழர் இருதயராஜ் துணைத்தலைவர்கள் உரையாற்ற இந்த மாதம் பிறந்தநாள் மற்றும் மணிவிழா கண்ட தோழியர்கள் தோழர்கள் சிறப்பாக சந்தன மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு வாழ்த்து கோஷங்களுக்கு இடையே பிறந்தநாள் கேக் வெட்டப்பட மிகச் சிறப்பாக விழா கலை கட்டியது. கூட்டத்தில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ஸ்னாக்ஸ் மற்றும் தேனீர் வழங்கப்பட்டு மாதாந்திர கூட்டம் நிறைவு பெற்றது.

அடுத்ததாக உலக மகளிர் தின விழா கொண்டாடும் முகத்தான் தோழியர் C. பொன்னழகு மகளிர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொது மேலாளர் டெலிகாம் தஞ்சாவூர் திருமதி பால சந்திர சேனா ITS மற்றும் திருமதி மாலதி மணிவண்ணன் மருத்துவர் தஞ்சை அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மகளிர் தின விழா தலைவர் சிறப்புரையாற்ற திரு எஸ் ராஜகுமார் டிஜிஎம் அட்மின் திருமதி என் அமுதா சிஏஓ வீ. சாமிநாதன் மாவட்ட செயலர், எம் எஃப் ஜெயசீலன் கிளைச் செயலர் பட்டுக்கோட்டை, M.முகமது யாசின் கிளைச் செயலர் மன்னார்குடி,  டீ. பக்கிரிசாமி கிளைச் செயலர் திருத்துறைப்பூண்டி, நெப்போலியன் திருவாரூர் ஆகியோர் தங்களது உரையிலே உலக மகளிர் தின விழாவின் சிறப்பினை விளக்கி வாழ்த்து உரையாற்றி அமர்ந்தனர்.

தோழியர் பெர்னிலா டிவைன்மேரி ஜோசப் பெண் சுதந்திரம் பற்றியும் தோழியர் எம் பத்மினி பெரியாரின் பெண்ணியப் பார்வை பற்றியும் தோழியர் மல்லிகா சுகுமாரன் மகளிர் முன்னேற்றத்தில் ஆண்களின் பங்கு பற்றியும் தோழியர் லைலா பானு சமூக சீர்திருத்தத்தில் பெண்களின் பங்கு பற்றியும் தோழியர் ஜெ. வேதநாயகி இலக்கியத்தில் பெண்கள் பற்றியும் தோழியர் வி.டி. அருட்செல்வி பாரதி கண்ட பெண் விடுதலை பற்றியும் கருத்துரை வழங்கி விழாவினை சிறப்பித்தனர். இன்றைய நிகழ்ச்சியில் மதிய உணவிற்கு நன்கொடை அளித்த தோழியர் டீ. உஷா தனஞ்சயன் தம்பதியர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

தோழியர் டாக்டர் T. மாதவி மணிவண்ணன் எம்பிபிஎஸ் டி டி சி டி நுரையீரல் மற்றும் சுவாச நோய் சிறப்பு மருத்துவர் டி எம் சி ஹெச் ஹாஸ்பிடல் மருத்துவக் கல்லூரி தஞ்சை அவர்கள் சிறப்பானதொரு மருத்துவ முறையினை விளக்கி உரையாற்றி தோழர் தோழியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு உரிய முறையில் நன்கு விளக்கம் அளித்து சிறப்புரையாற்றி அமர்ந்தார். அவர் நமது சங்க மூத்த உறுப்பினர் சி.வி. தங்கையன் அவர்களின் செல்வ புதல்வியாவார். தோழியர் ஆர். கோதாவரி நன்றி உரை நவில மதிய இனிய தஞ்சை பாரம்பரிய உணவு விருந்தாக அனைவருக்கும் பரிமாறப்பட்டு விழா இனிதே நிறைவுக்கு வந்தது.


No comments:

Post a Comment