Thursday, 24 June 2021

பயனுற்றோர் நெஞ்சங்கள்  அளிக்கும் நன்றி 

COVID 19 பெரும்தொற்று காலத்திலும் தொய்வின்றி தம் நலம் மறந்து பிறர் நலம் பேணும் நம் சங்க ஒப்பற்ற தலைவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
1. AIBSNLPWA கடலுார் மாவட்ட சங்க தோழர். G.நடராஜன் பணி ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட மோசமான உடல் நலக்குறைவால் தன்னுடைய கையொப்பத்தை கூட போடமுடியாமல் படிவம்.1 இல் கட்டை விரல்../thumb impression/ ரேகையை பதிவு செய்து CCA.TN. சென்னை அலுவலகத்திற்கு தன் commutation தொகையை பெற்றிட அனுப்பினார். நிர்வாகம் அவர் கடிதத்தை ஏற்க மறுத்து அவருக்கு வழங்கவேண்டிய commutation தொகையை வழங்காமல் கடந்த எட்டு மாதங்களாக  கால தாமதம் செய்து வந்தது. இது சம்பந்தமாக பல முறை கடலுார் மாவட்ட சங்கம் புகார் கடிதம் அனுப்பியும் பலனுமில்லை.அதன் பிறகு CCA.TN அலுவலகம் தோழர். நடராஜனின் உடல்நிலை காரணமாக அவருடைய இயலாமைக்கு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் சான்றிதழை பெற்று தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பினால் மேற்கொண்டு எதுவும் செய்திடமுடியும் என்று சொல்லி விட்ட பிறகு மாவட்ட செயலாளர்.நம் சங்க தலைவர்கள்.தோழர்கள்.D.G மற்றும் R.வெங்கடாச்சலம் அவர்களிடம் இது சம்பந்தமாக உதவிட கேட்டுக்கொண்டார். தோழர்.D.G உடனடியாக இதற்கு தகுந்த நடவடிக்கைகளுக்கான இலாக்கா உத்தரவுகளை CCA.TN அலுவலகத்திற்கு தெரிவித்து ,அந்த நடவடிக்கைக்கு பிறகு அடுத்த மூன்று தினங்களுக்குள் தோழர்.G.நடராஜனுக்கு சேர வேண்டிய COMMUTATION தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. இது போலவே இன்னுமொரு சேவை. நம் சங்க தலைவர்கள்  உடனடி நடவடிக்கை எடுத்து தீர்த்து வைத்தார்கள்.
2.
குடும்ப ஓய்வூதியர்.திருமதி. கஜலட்சுமி w/o அண்ணாமலை விழுப்புரம் அவர்கள்
தனக்கு வங்கி மூலமாக ஓய்வூதியம் வழங்க வேண்டி CCA.TN அலுவலகத்திற்கு விருப்ப கடிதம் கொடுத்தும் அவருக்கு CCA.TN SAMPANN மூலமாக வங்கியில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றாக விருகம்பாக்கம் சென்னையில் உள்ள CPPC.SBI அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய காரணத்தினால் தோழியர்.கஜலட்சுமி தன் ஓய்வூதியம் கிடைக்காது சிரமம் அடைந்து வந்தார். கடலூர் மாவட்ட சங்கம் மாநில செயலாளர்.தோழர்.R.V
க்கும் கடிதம் அனுப்பியது. மாநில செயலாளர் எடுத்த உடனடி நடவடிக்கைகள் காரணமாகத்
தோழியர்.கஜலட்சுமி அவர்களின் வங்கி கணக்கில் அவருக்கு சேர வேண்டிய ஒன்பது மாத ஓய்வூதிய தொகையான Rs. 2,90,000/- யை  22..06.2021 . அன்று வரவு வைக்கப்பட்டது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது போன்ற அரிய உதவிகளை நிர்வாகம் செய்கின்ற தவறுகளையும் , தாமதங்களையும்அவ்வப்போது களைந்து துயருறும் தோழர்களுக்கு உதவிடும்   தலைவர்கள் தோழர். D.கோபாலகிருஷ்ணன்  மற்றும் தோழர்.R.வெங்கடாசலம்  அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
R.அசோகன்.
மாவட்ட செயலர்.
கடலூர்.

No comments:

Post a Comment